பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii வரும்படிச் சொல்ல, அவரோ, பல குவளை களில் பாலைக் கொண்டு வந்தார். நானோ குடிக்கு முன்னாலேயே விக்கினேன். எனினும், அந்த இளைஞரையாவது திருப்திப்படுத்த வேண்டும் என்ற ஆசையில், நான் பத்தாண்டுகளுக்கு முன்னர் படித்த டால்ஸ்டாயின் வரலாற்றுப் புத்தகத்தை (இரண்டு தொகுதிகள்) மீண்டும் படித்த துடன், சோவியத் அரசாங்கம், டால்ஸ் டாயின் நூற்றாண்டு விழாவின் போது வெளியிட்ட நினைவு மலரையும், இதரக் கட்டுரைகளையும் படித்தேன். டால்ஸ்டாய் காலத்தில் வாழ்ந்து, அவருடன் நெருங்கிப் பழகிய ரோமன் ரோலண்ட், மார்க்ஸும் கார்க்கி, செர்ட்கோவ், செக் கோவ், அலெக்ஸாண்டர் கோல்டன் விஸ்லர், டர்க்னோப், டால்ஸ்டாயின் மூத்த மகன் செர்ஜி, மகள் டான்யா, மனைவி சோன்யா, அவருடன் ஒடிப்போன டாக்டர் காஷாஆகியோரின் நினைவுக் கட்டுரைகளையும், புரட்சி படைத்த லெனினின் கட்டுரையை யும் படிக்கப் படிக்க, என்னுள் நான் விலகி, டால்ஸ்டாயின் ஏதோ ஒரு கூறு என்னுள் விஸ்வரூபமெடுத்ததை நானே புரிந்து கொண்டேன். நாடகத்தை எழுதாமல் இருக்க முடியாது என்ற உந்தல் நிலை ஏற்பட்டது. மேலே குறிப்பிட்ட பெரு