பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvi -ஆகியோரும் பார்த்துப் பாராட்டிக் கெளர வித்தார்கள். இந்த நாடகம், மீண்டும் கிறிஸ்தவ இலக்கிய சங்கத்தின் சார்பில் பொங்கலை முன்னிட்டு, அங்கே நடந்த மூன்று நாளைய இலக்கிய கருத்தரங்கின் முதல் நாளில் நடந்தது. கல்லூரிப் பேராசிரியர்கள், பேராசிரியைகள், இலக்கியவாதிகள் பார்த்த இந்த நாடகத்திற்குப் பரவலாக ஒரு நல்ல பெயர் கிடைத்தது. இதேபோல் சென்னை வானொலியில் ஒலிபரப்பான இந்த நாடகத்திற்கு இருந்த வரவேற்புக் கடிதங் களைக் கணக்கில் கொண்டு, சென்னை வானொலி நிலையம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கலந்துரையாடலும் ஒலிபரப்பாகியது. இதில் பிரபல எழுத்தாளர் அகிலனும் கலந்து கொண்டார். மொத்தத்தில், என் எதிர்பார்ப்புக்குப் பன்மடங்கு மேலாக இந்த நாடகம் வெற்றி பெற்றது. கிறிஸ்தவ இலக்கிய சங்கப் பொதுச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் பேரா சிரியர் திரு. பாக்கியமுத்து இந்த நாடகம். தமிழிற்கு புதுமை என்றார். இந்தப் புதுமை பழமையாகும் அளவிற்கு, எழுத்தாளத் தோழர்கள் சிறந்த நாடகங்களை உருவாக்க வேண்டும் என்பதே என் ஆசை உருவாக்கி வருகிறார்கள் என்பதும் மகிழ்ச்சிக்குரிய செய்தி.