பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு முக்கியமான செய்தி இந்த நாடகக் காட்சிகள், வரலாற்று அடிப்படையில், ஆதாரங்களுடன் எழுதப் பட்டவை. கார்க்கி, டால் ஸ்டாயைப் பார்த்து, கடவுள்மாதிரி என்பது அவரது கட்டுரையில் உள்ளது. டால்ஸ்டாயின் உரையாடல்கள், அவர் எழுதிய கட்டுரை களிலிருந்தும், கடிதங்களிலிருந்தும், டயரியி' லிருந்து எடுக்கப்பட்டு ஒன்று சேர்க்கப்பட்டு, நம் மண்ணின் மணத்துடன் உரைநடை யாக்கப்பட்டது. மொத்தத்தில், சொல்லப் பட்டவை, அவரது கருத்துக்கள். அவற்றைச் சொன்ன விதந்தான் என்னது. சிறந்த புகைப்பட நிபுணராகவும் டால்ஸ்டாய் என்ற சுடர்விளக்குக்குத் துரண்டுகோலாயும் இருந்தவர் செர்ட்கோவ் (Chertkov). நாடகம், பார்த்த ஒரு சிலர், இவரை நாவலாசிரியர் செகோவ் என்று தவறாக நினைத்தார்கள். இதேபோல், டால்ஸ்டாயின் மனைவி சோன்யாவை என் படைப்பு, கொடுமைக் காரியாகச் சித்திரித்தால், அது என் தவறு. காட்சிகளில் வருவதுபோல் சம்பவம் நடந்தது உண்மைதான் என்றாலும், சமூகப் பிரக்ஞைக்கு முதலிடம் கொடுத்த ஒரு மேதைக்கும், அன்றைய உத்ரவாதம் இல்லாத ஒரு சமூகத்தில் குடும்பப் பிரக்ஞைக்கு முதலிடம் கொடுத்த அவரது மனைவிக்கும் மோதல் வருவது தவிர்க்க இயலாதது.