பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 + லியோ டால்ஸ்டாய் டால்ஸ் : (செருப்பைக் காட்டி) செர்ட்கோவ் இந்தச் செருப்பு நல்லா இருக்கா? செர்ட் : (திடுக்கிட்டு) என்ன... நான் கலை என்றால் என்னான்னு படிச்சா நீங்க செருப்புன்னா எதுன்னு காட்டlங்க... இது அருமையான கட்டுரை, உங்கள் கட்டுரையை விமர்சிக்கும் கலையம்சம் கொண்ட விமர்சனம். டால்ஸ் : செர்ட்கோவ்! விமர்சகன் யார் தெரியுமா? செர்ட் : விமர்சகனை உங்களால்தான் விமர்சிக்க முடியும். டால்ஸ் : விமர்சகன் என்பவன் அறிஞர்களைக் கேள்வி கேட்கும் ஒரு தனி மனம் படைத்தவன். பிரக்ஞை. பாதிப்பு... அடிமன வருடல்... என்ற புரியாத வார்த்தைகளைப் புரியாமல் எழுதிக்கொண்டு, தனக்கும் புரியாமல் படைப்பாளிக்கும் புரியாமல் எழுதும் ஒரு புலம்பன். இவர்களில் சிலர் ஒப்பாரி வைக்க இலக்கியம் ஒரு இழவு வீடு. அவ்வளவுதான். செர்ட் : என்ன நீங்க! இது நம் ரஷிய பத்திரிகை, உங் களை ஒகோன்னு பாராட்டியிருக்கு... படிக்கிறேன் கேளுங்க. டால்ஸ் : (சலிப்போடு) இவற்றை எல்லாம் கேட்டுக் கேட்டு அலுத்துப் போச்சு, டால்ஸ்டாய் ஒரு சாதாரண மனிதன் என்பதை ஏனோ புரிந்துகொள்ள மறுக் கிறார்கள் ! என் ஆணவத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று கொண்டிருக்கும்போது