பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 9 போன பிறகு நிறைய பேருக்கு நிறையத் தடவை மண்டி போட வேண்டியது வரும். இப்ப எழுந்திரு. நீ எழுந்திருந்தாதான் அவர் எழுந்திருப்பார். (மாணவன் எழுந்திருத்தல்-செர்ட்கோவ் டால்ஸ்டாயை தூக்கி நிறுத்துகிறார்) டால்ஸ் : நீ எங்கிருந்து வர்றே? uomewsT : LTübĞurr6ü (35®Lığ5)6wim (Tambov Guberina)6ğl60 இருந்து வர்றேங்க. டால்ஸ் : படிக்கிறியா? மாண : என்னைப் பார்த்தால் அப்படித் தெரியலையா? செர்ட் ; தெரியுது. நீ மண்டி போட்டதிலிருந்தே படிச்ச வன்னு நல்லா தெரியுது. டால்ஸ் : ஆமாம். என்னுடைய இளமை நாவலைப் படிச்சிருக்கிறியா? குழந்தைப் பருவத்தைப் படிச்சிருக்கிறியா? மாண : (சமாளித்து) படி... படி... படிச்சேன்... ம்... இளமையான குழந்தை... குழந்தையான இளமை... படி... படிச்சேன்... டால்ஸ் ; போகட்டும். போரும் சமாதானமும் படிச்சியா? மாண : படிச். சே. சமாதானமான போரு... போரான சமாதானம்... படிச்சேன்... ம்... படிப்பேன். டால்ஸ் : அப்படியா... போரும் சமாதானத்துலே எந்த பாத்திரம் உனக்குப் பிடிச்சுது.