பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 + லியோ டால்ஸ்டாய் மாண : பாத்திரமா!... அதுவந்து. பாத்திரம். அற்புத மான பாத்திரம். செர்ட் : தம்பி அறிவாளி மாதிரி பினாத்தாதே... படிக்க லேன்னா படிக்கலேன்னு பட்னு சொல்லிடேன்... சும்மா சொல்லு. மாண : உண்மை... படிக்கலே படிக்கலே படிக்கவே இல்லை. செர்ட் : பாத்தீங்களா... படிக்கலேங்கிறதுதான் இவன் கண்டுபிடிச்ச பேருண்மை; புத்தகத்தை தேடலேங் கிறதுதான் இவன் தேடிப் பெற்ற உண்மை. டால்ஸ் : மிரட்டாதே செர்ட்கோவ். தவாரிஷ் நீ என் நாவல் களையோ, சிறுகதைகளையோ, கட்டுரைகளையோ படிக்கலேன்னு நல்லாத் தெரியுது. இதுக்காக நான் கோபப்படலே. நீ சின்னப் பையன். போகப் போக படிக்கலாம். ஆனா பல பெரிய நபர்கள், என் படைப்புகளைப் படிக்காமல் சரடு விடறாங்க... தப்பா படிச்சிட்டு பின்பற்றறவனைவிட படிக்காதவன் மேல். போகட்டும், என் கதைகளைப் படிக்கலே, ஆனா என்னைப் பார்க்க வந்திருக்கிற்ே... காரணம் என்னப்பா? மாண : ஊருக்குப் போனதும் டால்ஸ்டாயைப் பார்த்தி யான்னு கேப்பாங்க... பார்த்தேன்னு சொல்ல வேண்டாமா... டால்ஸ் : ஒஹோ... நான் உயிரோடயே மியூசியம் ஆயிட் டேனா? இதோ பாரு தம்பி, ஒரு எழுத்தாளனுக்கு