பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 + லியோ டால்ஸ்டாய் டால்ஸ் ஊன உடம்பால பெற்ற பிள்ளை பதிமூணு. ஆனால் என் ஞான உடம்புல பிறந்த ஒரே பிள்ளை செர்ட்கோவ். இந்தக் கிறுக்கனுக்காக வாழ்கிற கிறுக்கன் அவன். சோன்யா : நான் கேட்டுக்கிட்டுதானே வந்தேன். மேன் ஆன்ட் மாஸ்டர் (Man and Master) கதையை வாங்க வந்திருக்கான் கழுத களவாணிப் பய. டால்ஸ் : (சிரிப்புடன்) என் கதை கழுதை... அவன் களவாணி. இந்தக் கழுதைக்கு நீதான் குட்டிச்சுவரா நிற்கிறே. சோன்யா : சிரித்து மழுப்ப வேண்டாம். அந்தக் கதை எனக்கு வேணும். உங்க கொள்கைக்காக என் பிள்ளைங்களை நடுத்தெருவிலே நிறுத்த முடியாது. டால்ஸ் : உனக்குத்தான் 1881ஆம் வருடத்துக்கு முன் னாலே எழுதின என் படைப்புகள் எல்லாத்துக்குமே காப்பிரைட் கொடுத்துட்டேன்ே, அதுலேயே போதிய வருமானம் வரும். அதற்குப் பிறகு உள்ளதை யார் வேணும்னாலும் வெளியிடலாம்னு உரிமை கொடுத்துட்டேன்... அதைக் கேட்டா எப்படி? சோன்யா எப்படியாவது எனக்கு வேணும். உங்க உப்புச் சப்பில்லாத இலட்சியத்துக்காக ஊரார்கள் உங்க எழுத்துச் சொத்தை அனுபவிக்க விட மாட்டேன். என் குடும்பம் உங்க இலட்சியத்துக்குப் பரிட்சைக்கூடமா இருக்கிறதை நான் அனுமதிக்க மாட்டேன். அதை தரப்போlங்களா இல்லையா?