பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 + லியோ டால்ஸ்டாய் என்பது முக்கியமல்ல. எதுக்காகச் செய்கிறோம் என்பதுதான் முக்கியம். இதுவரைக்கும் நான் எழுதின படைப்புகள் ஏழ்மையின் வெற்றியே தவிர ஏழைகளின் வெற்றியல்ல. அதனாலேதான் அந்த ஏழைகளுக்கு வெற்றியளிக்க இதைத் தைக்கிறேன். உனக்கும் நரம்பு தளர்ச்சி வந்துட்டுது. அடிக்கடி கோபப்படறே. நீயும் திருந்தனும்னா செருப்பு தச்சுப் பழகனும். இந்தா... கொஞ்சம் தை பார்க்கலாம். சோன்யா : இன்னமும் இருந்தா இந்த செருப்பாலேயே அடிப்பீங்க போலிருக்கே! டால்ஸ் : அடிக்க மாட்டேன். உன் கைபட்டு இந்த செருப்பு பாவமாப் போனாலும். இதில் என் அருமை பண்ணையாள் கால்பட்டு இதே செருப்பு புண்ணிய மாயிடும். இந்தப் புனிதமான செருப்பு உன் கன்னத்துலே பட்டு களங்கமாகக் கூடாது! (சோன்யா கோபத்தோடு போகிறாள். டால்ஸ்டாய் சிரிக்கிறார்)