பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி - 2 இடம் : யாஸ்நயா போல்யானா பண்ணை நேரம் : நண்பகல் பாத்திரங்கள் : டால்ஸ்டாய்- அலெக்ஸான்ட்ரியா சோன்யா- பண்ணையாள். (அலெக்ஸாண்ட்ரியா உள்ளிருந்து கோபமாகப் பேசிக்கொண்டு வர பின்னால் டால்ஸ்டாய் வருகிறார்) அலெக்ஸ் : கொடுத்த வாக்கைக் காப்பாத்தாதீங்க. பெண்டாட்டிக்காகக் கொள்கையை காத்திலே விடறவங்களைக் கண்டா எனக்குக் கோபம் வந்துடுது. அது பெற்ற தந்தையா இருந்தாலும் சரி. டால்ஸ் : என்னம்மா சொல்றே. மேன் ஆண்ட் மாஸ்டரை பற்றிச் சொல்றியா? அலெக்ஸ் : ஆமாம். இந்த வீட்டுக்கு மாஸ்டர் நீங்களா, அம்மாவா? எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும். டால்ஸ் : நான் மேன் (Man), ஐ ஆம் எ மேன் (I am a man). அப்படீன்னா தலைப்புப்படி அம்மாதான் மாஸ்டரா இருக்கணும். மன்னிச்சுடம்மா! அலெக்ஸ் : மனைவியை அனுதாபத்தோட பார்க்கிற ஒரு கணவனை மன்னிச்சிடலாம்; பெற்ற பிள்ளைகள் மீதுள்ள அன்பால் சிலசமயம் பித்துக்குளி மாதிரி