பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 + லியோ டால்ஸ்டாய் டால்ஸ் : ஆண்டவனே! கொடுமைக்கும் ஓர் எல்லை யில்லையா அலெக்ஸான்ட்ரியா. உடனே ஓடிப்போயி அந்த அப்பாவியைக் காப்பாற்று... போம்மா. (அலெக்ஸாண்ட்ரியா பண்ணையாளுடன் வெளியே விரைகிறாள். உள் அறையிலிருந்து சோன்யா வருகிறாள்) சோன்யா : அப்பாவும் மகளும் ஏதோ பேசிக்கிட்டு இருந்தாப் போல இருக்கு. டால்ஸ் : பேசலம்மா. கண்முன்னாலே நடக்கிற ஒரு அநியாயத்தைக் கண்டிக்க இயலாத ஒரு கோழையை ஒரு வீரப்பெண் கண்டிச்சு இருக்கிறாள் அவ்வளவு தான். சோன்யா உன் கொடுமைக்கும் ஒரு வரம்பு வேண்டாமா? குடியானவனை இப்படியா அந்தத் தடியனை வச்சு அடிக்கிறது? குடியானவர்கள் உன் கொடுமையை நினைத்துப் பார்க்க ஆரம்பித்தால் நீ இங்கு இருக்க முடியுமா? கட்டுப்பட்ட கடல் பொங்கினால் என்ன ஆகும்? மலைகள் குதிக்கத் துவங்கினா என்னாகும்? இவர்கள் புரட்சி செய்ய லெனின் தேவையில்லை. மார்க்ஸிம் கார்க்கியின் எழுத்தும் தேவையில்லை. உன்னை மாதிரி ஆறு சோனியாக்கள் இருந்தா போதும். இரத்த ஆறு ஒடும். ஒடத்தான் போகிறது. சோன்யா : ஒடுமோ, ஓடாதோ... அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. என் தோட்டத்து மரத்தை வெட்டின வனை நான் சும்மாவிடப் போவதில்லை. அவனை