பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 21 வெட்டாம விட்டதுக்காகவே எனக்கு அவனுங்க நன்றி சொல்லனும்! டால்ஸ்: ஒருநாளைக்கு என்னை நீயே விரட்டப் போறேன்னு நினைக்கிறேன் சோன்யா. யாரையாவது உன்னால் அடிக்காமல் இருக்க முடியாதுன்னா இதோ நான் இருக்கிறேன்... என்னை என்ன வேணுமின்னாலும் பண்ணு. சோன்யா ; லியோ, நீங்கதான் யோகியாச்சே! சொத் தெல்லாம் எங்களுக்குப் பிரிச்சுக் கொடுத்திடுங்க. இப்போ அந்தச் சொத்தைப் பாதுகாக்கிற நான் என்ன வேணுமுன்னாலும் பண்ண முடியும். இது என்னோட உரிமை. நீங்க தலையிட உரிமை இல்லை. புரியதா? டால்ஸ் : புரியதும்மா புரியுது. சொத்துக்கள் தனியாரிடம் இருப்பது தீமை என்று உபதேசம் செய்துட்டு அதே தீமையை உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் பிரிச்சுக் கொடுத்தா இந்தத் தீயவனுக்கு இந்தத் தண்டனை பத்தாது. சோன்யா - சொத்து உரிமை ஒரு தீமை. அது நம்மையே எரிக்கும் நெருப்பு. என் மனைவி என்னைவிட பெரியவளாய் ஆகணும். அதுதான் என் சுயநலம். பேசாமல் நிலத்தையெல் லாம் குடியானவங்களுக்குப் பிரிச்சிக் கொடுத் துடும்மா! சோன்யா நல்லவேளை. சொத்துன்னதும் எனக்கு ஞாபகத்துக்கு வந்துட்டுது. லியோ. நான் சொல்றதைக் கேளுங்க. நீங்க என் சொத்து, ஆகையால் நீங்க