பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 31 கார்க்கி : ரொம்ப நன்றி. கிராம மக்களை அவர்கள் இயல்புபடி காட்டறது தேவைதான். ஆனால் அதுவே இலக்கியமாயிராது. கிராமிய சூழ்நிலையை மட்டும் அப்படியே வர்ணிக்கிறதாக இருந்தால் காசு போட்டு எதுக்காக நாவல் வாங்கணும்? பேசாம அந்தக் காசிலே கிராமத்துக்கே போயிட்டு வரலாமே. அதனால கிராம மக்கள் எப்படி இருக்காங்க என்பதைக் காட்டுறதோடு எப்படி இருக்கணும்னும் காட்டணும். சமூக பிரக்ஞையுள்ள எழுத்தாளன் அப்படித்தான் எழுதணும்னு நினைக்கிறேன். அப்படி ஆகிறதுக்கு முயற்சி பண்றேன். இருந்தாலும் நீங்க சொல்றதுமாதிரி இன்னும் இயல்பா எழுத முயற்சி செய்றேன். டால்ஸ் : உனக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கு... அதனால்தான் சொல்றேன். ஒரு எழுத்தாளனுக்கு என்னெல்லாம் வேண்டுமோ, அவை உன்கிட்ட இருக்கு. எழுதறவனுக்கு மூன்று அம்சங்கள் தேவை: முதலாவது என்ன சொல்லப் போகிறோம் என்பது. இரண்டாவது ஒரு அந்நியோன்யம். மூன்றாவது நடை. முதல் இரண்டும் ஒழுங்கா இருந்தால் மூன்றாவது தானா வந்துடும். ஒண்ணு தெரியுமா உனக்கு? நம் கிராம மக்கள், நாலு மூணைவிட பெரிசா இருக்கிறவரைக்கே மூணாவது நம்பர். நாலாவது நம்பரைவிட பெரிசா சிறுசாங்கிறதைப் பத்திக் கவலைப்படமாட்டாங்க... புரியுதா கார்க்கி... கார்க்கி : புரியது மாஸ்டர். இதுல என் பார்வைதான் தங்களுக்குப் புரியமாட்டேங்குது. குடியானவன், நாலு