பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் - 37 விட்டுட்டு போயிட்டா. கார்க்கி... ஏன் பேசமாட்டேங் கிறே? கார்க்கி : இது உங்க குடும்ப விவகாரம். எனக்குப் பேச உரிமையில்லை. டால்ஸ் : இதுக்குதான் நான் உன்னைப் பாராட்டறேன் கார்க்கி அவள் போனதிலே இருந்து இந்த வீடே வெறுமையா இருக்கு... என் மகளை நான் மறுபடியும் பார்ப்பேனா கார்க்கி. கார்க்கி : நீங்கள் கலங்கலாமா? சிறைக்குப் போகிறவர் களைப் பார்த்துப் பொறாமைப்படுவதாகச் சொல்லும் நீங்கள் கலங்கலாமா? கடவுள் எனக்குக் கஷ்டத்தைக் கொடுக்கலையேன்னு அடிக்கடி புகார் செய்யும் நீங்கள் இந்தக் கஷ்டத்தைத் தாங்கமுடியாமல் புகார் செய்யலாமா? டால்ஸ் : உண்மைதான் கார்க்கி. ஆண்டவன் கொடுத்த தண்டனை இது... இதை மீற எனக்கு உரிமை யில்லை. (உட்புறம் பார்த்துவிட்டு) சரி, என் மனைவி வராள். அவள் பேச்சை நீ கேட்க வேண்டாம். கேட்கக் கூடாது. போயிட்டு வர்ரியா...? கார்க்கி : போயிட்டு வரேன். (கார்க்கி போகிறார்-சோன்யா வருகிறாள்) சோன்யா : கார்க்கியோட பொம்புளை விஷயம் பேசி னிங்க போலிருக்கே? டால்ஸ் : ஆமாம். சில அரக்கிகளைப் பற்றி பேசிக்கிட் டிருந்தோம். சோன்யா, ஜார் அரசாங்கம் என்னைக்