பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 41 செர்ட் : இன்றைக்கு வழக்கத்துக்கு மேலேயே சந் தோஷமா இருக்கீங்க. டால்ஸ் : அதுக்குக் காரணம் இருக்கு செர்ட்கோவ். தென்னாப்பிரிக்காவில் ட்ரான்ஸ்வாலில் (Transval) இருந்து ஒரு ஹிந்து கடிதம் எழுதியிருக்கார். எம். கே. காந்தி என்கிற இந்தியர். என்னை நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறாராம். என் பேர்லயே டால்ஸ் டாய் பண்ணைன்னு ஒன்று வச்சிருக்கிறாராம், என்னை மானசீகமா நினைத்தே தென்ஆப்பிரிக்கா அரசின் இனவெறிக்கு எதிராய் போராட்டம் நடத்துறாராம். ஏனோ எனக்கே தெரியலே, அந்த ஹிந்துவை, இந்தியரை உடனே பார்க்கனும் போலிருக்கு. புழுக்கமா இருந்த என் மனசுக்கு அந்தக் கடிதம் தென்றல்மாதிரி வந்தது. செர்ட் : நானும் கேள்விப்பட்டிருக்கேன். அவர் இன் னொரு டால்ஸ்டாய் ஆகிக் கொண்டிருக்கிறாராம். பெர்நாட்ஷாகிட்ட இருந்து கடிதம் வந்ததா? டால்ஸ் : வந்தது. செர்ட் ; ஏன் சலிப்பா சொல்றீங்க? டால்ஸ் : பின்ன என்ன... மனுஷனுக்கு எல்லாமே வேடிக்கைதான். வாழ்க்கையை ரொம்ப லேசா எடுத்துக்கணும். வாழ்க்கை அவர் நினைக்கிறமாதிரி ஒரு நேர்கோடு இல்லே. அது ஒரு வட்டம். சுயநலம் என்ற மையத்தைக் கொண்ட மனித வட்டம். ஒரு வட்டம் இன்னொரு வட்டத்தைத் தொடுறதும் உண்டு.