பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 + லியோ டால்ஸ்டாய் தொடக்கிறதும் உண்டு. இது அவருக்குப் புரியமாட் டேங்குது. பாசத்தை பாசாங்காய் நினைக்கிறார். நீயே சொல்லு. என் மகளின் பிரிவு தாங்காமல் நான் தவிக்கிறேனே. அந்த உணர்வு போலியா? செர்ட் : அலெக்ஸாண்ட்ரியா இப்போ வந்தால் என்ன செய்வீங்க? டால்ஸ் : என்ன செய்வேன்னு இப்ப எப்படிச் சொல்ல முடியும்? என் உணர்வுகளை அதன் இயல்புபடி விடுவேன். செர்ட் : அலெக்ஸாண்ட்ரியா வந்துட்டதாக கற்பனை பண்ணுங்க பார்க்கலாம். டால்ஸ் : வர வர... எனக்கும் கற்பனை நிஜமாகவும் நிஜம் கற்பனையாகவும் போயிட்டுதப்பா. இது வரைக்கும் அவள் என்கிட்டயே இருக்கிறதா கற்பனை பண்ணிட்டு இப்பொதான் நிஜத்துக்கு வந்தேன். என் அருமை மகள் அலெக்ஸாண்ட்ரியா வந்தால் நான் இன்னும் இருபது வருஷம் வரைக்கும் வாழலாம். இல்லேன்னா... இல்லேன்னா... அலெக்ஸ் : அப்பா... அப்பா... (ஓடி வருகிறாள்.) டால்ஸ் : மகளே! நான் காண்பது நிஜம்தானே. எனக்கு பைத்தியம் பிடிக்கவில்லையே... (மகளை அனைத்துக் கொள்ளுகிறார்.) அலெக்ஸ் : உங்களைப் பிரிஞ்சிருந்த பத்துநாளும் எனக்குப் பத்து யுகமா தெரிஞ்சுதப்பா.