பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 லியோ டால்ஸ்டாய் அலெக்ஸ் : உன்னை என்னால் விரும்ப முடியாதுன்னு நினைச்சேன். ஆனா அது தப்புன்னு இந்த பத்து நாளிலே புரிஞ்சுக்கிட்டேனம்மா. டால்ஸ் : பாத்தியா சோன்யா, பிள்ளைங்க கெட்டுப் போய் வீட்டைவிட்டு ஓடும். இவள், நாம ரெண்டு பேரும் கெட்டுப் போனதாலயே ஓடினவள். நீ எத்தனை தப்பு செய்தாலும் இவளைப் பெற்றுத் தந்த ஒரு செயலுக்காக நீ என்ன சொன்னாலும் நான் கேட்பேன்! கொஞ்சம் குடிக்க ஏதாவது அனுப்பறியா? சோன்யா : இதோ, நானே கொண்டு வரேன் (சோன்யா உள்ளே போகிறாள்.) செர்ட் : (டால்ஸ்டாயை நோக்கி) என்ன சொன்னாலும் கேட்பேன்னு சொல்லிட்டீங்க. அவங்க டயரியைக் கேட்பாங்க... கொடுப்பீங்களா? நீங்கள் எழுதின எல்லா படைப்புகளுக்கும் உரிமை வேணும்னு கேட்பாங்க கொடுப்பீங்களா? முன்னபின்ன யோசிக்காம பேசுறீங்க. டால்ஸ் : ஒருவன் ஒருவர்கிட்ட முன்னாலேயே யோசித்து விட்டுப் பேசினால் அந்த ஒருவர் அவனுக்கு அதிகாரி யாய் இருப்பார். ஒருவர்கிட்ட பேசிட்டு அப்புறம் பின்னால் யோசித்தால் அந்த ஒருவர் அவனுக்கு வேலையாளாய் இருப்பார். முன்னபின்ன யோசிக் காமல் பேசினால் அவங்க கணவன் மனைவியாத் தான் இருக்க முடியும். செர்ட்கோவ் - நான் சமூக பிரக்ஞைக்கு முதலிடம் கொடுக்கிறேன். அவள் குடும்ப பிரக்ஞைக்கு முதலிடம் கொடுக்கிறாள்.