பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
v


    ‘போதும் உங்கள் உபகாரம்’ என்ற சிறுகதை உணர்த்திய மனிதாபமான உணர்வு திரு.சமுத்திரத்தை உயரிய அரிய இலக்கியப் படைப்பாளர்கள் வரிசையில் ஒருவராகச் சேர்க்கும். அந்த மனிதாபிமானம் தமது எழுத்துக் கலைக்காக அவர் கடையில் வாங்கி அவ்வப்போது போர்த்திக்கொள்ளும் சந்தர்ப்பப்போர்வை இல்லை. அவர் வாழ்வின் எண்ணங்களில், சொற்களில், செயல்களில், எல்லாவற்றிலும் மைய இழையாக அது திகழ்கிறது, அவரைப் படைத்து ஆட்டி வருகிறது. எனவேதான் அநீதியும் சுரண்டலும், மனிதர்களை மனிதர்கள் ஏமாற்றும் அற்ப வித்தைகளும் அவருக்குப் பொறுக்கமுடியாத கொடுமைகளாகி அவரைக் குமுற வைக்கின்றன, அவர் எழுத்துக்களில் கொந்தளிக்கின்றன; அவற்றை உணர்ச்சிச் செந்தணலில் இட்டு வார்த்து எடுத்த சிறந்த இலக்கியமாக ஆக்குகின்றன.
    இத்தகைய மனிதரான திரு.சமுத்திரம் ரஷ்யப் பேரறிஞரும் உலகம் புகழும் இலக்கியப் படைப்பாளரும் சிந்தனாவாதியுமான லியோ டால்ஸ்டாயின் வாழ்க்கையால் வசீகரிக்கப்பட்டதில் ஆச்சரியம் இல்லை. டால்ஸ்டாய் நூற்றாண்டு விழா சென்னையில் கொண்டாடப்பட்ட போது, திரு.சமுத்திரம் அந்த விழாக்களில் பலவற்றை நடத்திய இந்தியா சோவியத் ரஷ்யா நட்புறவு