பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 + லியோ டால்ஸ்டாய் டால்ஸ் : மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்... சோன்யா : நான் பேயா? இல்லை, என்னை பேயாய் ஆக்கிற நீங்கதான் பேய் செர்ட்கோவ் ஒரு சூன்யக்காரன். உங்களை வசியம் பண்ணிட்டான். என் புருஷனை எனக்கில்லாம பண்ணிட்டான் நான் அவனை விடப்போறதில்லே. கொலை பண்ணப் போறேன். இல்லை சாகப் போறேன்-- விஷத்தைக் குடிக்கப் போறேன். முடியாது. சாக முடியாது... என் மகன் லியோவைக் கூட்டிட்டு வரப் போறேன். இன்னைக்கு ரெண்டிலே ஒண்னு பாக்கத்தான் போறேன். பாத்துடலாம்... பாத்துடலாமா? பாத்துடலாம். லியோ! லியோ! என் மகனே லியோ! சோன்யா வெளியே விரைகிறாள்டால்ஸ்டாய் இலேசாகத் தலையில் அடித்துக் கொள்கிறார்)