பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி - 6 இடம் : டால்ஸ்டாயின் அறை. நேரம் : காலை வேளை. பாத்திரங்கள் : காஷா-டால்ஸ் டாய்அலெக்ஸாண்ட்ரியா. (டால்ஸ்டாய் சாய்ந்து படுத்திருக்க, டாக்டர் காஷா அவர் இதயத் துடிப்பை டெஸ்ட் செய்கிறார்) காஷா ; லியோ, இதயத் துடிப்பு திடீரென விழுந்திருக்கு. என்ன சாப்பிட்டீங்க? டால்ஸ் : காஷா, சோன்யாவுக்கு என்ன வயசிருக்கும்? காஷா : அறுபத்தி எட்டுன்னு நினைக்கிறேன். டால்ஸ் : அவளுக்கு 68. எனக்கு 89. காஷா : என்ன லியோ சம்பந்தமில்லாம பேசlங்க! டால்ஸ் : சம்பந்தமாதான் பேசறேன். நேற்று ராத்திரி சோன்யா வந்தாள்... சொல்லவே வெட்கமாக இருக்கு... வெறுப்பாகவும் இருக்கு. காஷா சொல்லுங்க லியோ. டால்ஸ் : வந்தவள். கணவன் மனைவியா இருக்கணும்னு கேட்டாள். காஷா : அப்படித்தானே இருக்கீங்க.