பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி - 7 இடம் : தோட்டம். நேரம் : காலை 4 மணி. பாத்திர்ங்கள் : டால் ஸ்டாய்-காஷா அலெக்ஸாண்ட்ரியா, (டால்ஸ்டாயும், டாக்டர் காஷாவும் கம்பிளிப் போர்வை அணிந்து கையில் ஒரு பாஸ்கட், அரிக்கன் லைட், டார்ச்சு லைட்டுடன் நிற்கிறார் கள்-அலெக்ஸாண்ட்ரியாவும் இருக்கிறாள்) டால்ஸ் : காஷா... சீக்கிரமா புறப்படுவோம். சோன்யா எழுந்திரிச்சு வந்துடப் போறாள். காஷா : நீங்கதான் மூணு கதவையும் பூட்டிட்டீங்களே. அப்புறம் எப்படி வர முடியும்? டால்ஸ் : என் சோன்யாவின் அன்பு தாழை மீறியது. அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பது அவளுக்குப் பொருந்தும். ஆனா ஒரு சின்ன மாறுதல் நான் அவளிடத்தில் அன்பு வைத்திருக்கிறேனா என்பதை பரிட்சித்துப் பார்க்க அவள் தன் அன்பை சந்தேகமாக மாற்றிவிட்டாள். அவள் சந்தேகம்தான் அன்பின் மறுவடிவம். இதில் எனக்கு சந்தேகமில்லை. சரி, என் தொப்பியைக் காணோமே... தொலைஞ்சு போச்சு...