பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 + லியோ டால்ஸ்டாய் இன்று... என் சோன்யாவை இனிமேல் மரங்கள் மட்டுந்தான் பார்க்கும்... டால்ஸ்டாய் பார்க்க மாட்டான்... இந்த டால்ஸ்டாய் பார்க்க மாட்டான்... அலெக்ஸ் : அப்பா... டால்ஸ் : மகளே, ஆரம்பத்திலே அவள் டயரியை நான் கேட்டேன்... மறுத்தாள். அதனால் எங்களுக்குள் காதல் பிறந்தது. இப்போ என் டயரியை அவள் கேட்டாள்... மறுத்தேன். அதனால் மோதல் வந்தது. என்ன வாழ்க்கை பார்த்தாயா!... காஷா : நேரமாகிறது. லியோ, இப்ப போனால்தான் ‘ஷசிகிநோ (Shchekino) ஸ்டேஷனில் ரயிலைப் பிடிக்க முடியும். அலெக்ஸ் : அப்பா. இனிமேல் நான் உங்களைப் பார்ப் பேனா... டால்ஸ் : அழாதம்மா. உனக்கு அடிக்கடி கடிதம் போடு றேன். நிகோலயீ (Nikolayea) என்கிற பேரில் உனக்குக் கடிதம் வரும். செர்ட்கோவ்கிட்டயும் சொல்லிடு. அம்மாகிட்ட மட்டும் என் இருப்பிடத்தைச் சொல்லிடாதே! எனக்கு உத்தரவு கொடுக்கிறி யாம்மா... அழாதேம்மா... அலெக்ஸ் ; போயிட்டு வாங்கப்பா... (டால்ஸ்டாயும், காஷாவும் சென்ற திசைநோக்கி கண்ணிர் விட்டு நிற்கிறாள் அலெக்ஸ்)