பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி - 8 இடம் : அஷ்டபோவ (Astapova) ரயில் நிலையம். பாத்திரங்கள் : டால்ஸ்டாய்-டாக்டர் காஷாஸ்டேஷன் மாஸ்டர் ஓஸோலின் (Ozolin). இருமிக் கொண்டிருக்கும் டால்ஸ்டாயை டாக்டர் காஷா கைத்தாங்கலாக அழைத்துவந்து பிளாட் பாரத்தில் படுக்க வைத்து இதயத் துடிப்பைக் கவனிக்கிறார்) காஷா : நான் சொன்னதைக் கேட்டிருந்தா ஜூரம் அதிக மாயிருக்காது. கடவுளே! டால்ஸ் : எந்தக் கடவுளைச் சொல்றியோ அந்தக் கடவுளை நான் நேருக்கு நேர் பார்க்கப் போவதற்கு ஆசிர்வாதம் பண்ணு. மருந்து கொடுக்காமல் உதவி பண்ணு. காஷா ஏதோ பத்து நாளிலே ஊருக்குத் திரும்பப் போகிறோம் என்ற எண்ணத்திலே நானும் நீங்க ஒடுறதுக்கு உடந்தையா இருந்துட்டேனே... எனக்கு என்ன பண்றதுன்னே புரியலே... டால்ஸ் : நான்தான் செத்துக்கிட்டு இருக்கேன்னு பார்த் தால்... டாக்டருமா...?