பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 - லியோ டால்ஸ்டாய் காஷா ஒப்ட்மா (Optma) மடத்திலே கண்டபடி சுத்திட் டீங்க. ரயிலிலே மூணாவது வகுப்பிலே பிரயாணம் செய்யாதீங்கன்னேன், கேட்கலே. அதோட மணிக்கணக்கா பிரயாணிகள் கிட்ட பேசிட்டீங்க. இப்ப பிரயாணத்தைத் தொடர முடியாம ஆயிட்டுது. டால்ஸ் : எந்தப் பிரயாணத்தை? ரயில் பிரயாணத் தைத்தானே. காஷா... என் வாழ்க்கைப் பிரயாணம் இருக்கிறது வரைக்கும் நான் இந்தப் பிரயாணத்தைத் தொடர்ந்து ஆகணும். ரஷ்யாவுக்குள்ளேயே இருந்தால் எப்படியும் கண்டுபிடிச்சுடுவாங்க... அதனால... காஷா : அதனால்தான் சொல்றேன். பேசாமல் ஊருக்கு திரும்புவோம். டால்ஸ் : காஷா, ஏழு வயசிலே என் அப்பா, நான் ஒரு தப்பு பண்ணதுக்காக ஒரு மாடி அறையில் வச்சு பூட்டினார். நான் என் சுதந்திரத்துக்காக அங்கே இருந்த ஒரு ஜன்னல் வழியாக வெளியே குதித்தேன். இப்போதும் இந்த ஆன்மா இந்த உடம்பில் உள்ள ஒன்பது ஜன்னல்களில் ஒரு ஜன்னல் வழியாக குதிக்கிறது வரைக்கும் ஒயமாட்டேன். இந்த விடுதலையை விடமாட்டேன். நாம வெளிநாடு போகப் போகிறோம். ரஷ்ய வீட்டில் இருந்து இன்னொரு வீட்டுக்குப் போகப் போகிறோம்; வீடு கிடைக்கிற வரைக்கும் வீடு வீடாய் அலையப் போகிறேன் (இருமுதல்.) காஷா ஜூரம் ஏறிக்கிட்டே போகுதே. லியோ, படுங்க...