பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
vii



     வலுவுடனும் தெளிவுடனும் திகழ்ந்தது. அவர்கள் நடிப்பிற்கு எந்த அளவு சான்று பகர்ந்ததோ அதே அளவு திரு. சமுத்திரத்தின் படைப்புத் திறனுக்கும் எடுத்துக்காட்டாக அமைந்தது.
     தமிழ் வளர்ச்சியில் ஆர்வம் படைத்தவர்களுக்கு அண்மைக் காலத்தில் வெளி வரும் பெரும்பான்மையான நாடகங்களின் போக்குக் கவலையைத் தருவதாக உள்ளது. பொழுதுபோக்கு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, விரசத்தையும் ஹாஸ்யத்தையும் இரு கோல்களாக நட்டு இவற்றினிடையே 'காசே கடவுள்' என்ற குறுகிய நோக்கைக் கயிறாகக் கட்டி அதன்மீது அபாயகரமாகக்கழைக் கூத்துக் காட்டும் படைப்புக்கள் நம் நாடக மேடைகளில் மலிந்து வருகின்றன. தனிமனிதன் பற்றியோ சமுதாயம் பற்றியோ சிந்திப்பவர்களுக்கு இந்தக் கூத்து அரங்கங்கள் இடம் தருவதில்லை. எனவேதான் எவ்வளவோ நாடகங்கள் எழுதப்பட்டும், அரங்கில் அவை வெற்றி பெற்றும், சில திரைப்படங்களாக உருவெடுத்தும், இலக் கியம் என்று பார்த்தால் அவை வெறுமையே நிறைந்து காண்கின்றன.

     இப்படிப்பட்ட சூழ்நிலையில் திரு. சமுத்திரத்தின் ’லியோ டால்ஸ்டாய்’ நாடகத்தை அணுகுபவர்கள் வெம்பாலைப்