பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 69 கூட துக்கத்தை அடக்கிக்கிட்டு மரணத்தை இனிமை யாகக் கற்பனை செய்தவன் நான். ஊருக்கு மட்டும் உபதேசியல்ல ஒஸோலின். (கூட்டத்தினரை விலக்கிக்கொண்டு ஓடோடி வந்த அலெக்ஸான்ட்ரியா அப்பா என்று டால்ஸ்டாயைக் கட்டிக்கொள்கிறாள்) அலெக்ஸ் : அப்பா... பிளாட்பாரத்து மக்களைப் பற்றி எழுதின நீங்கள் ரயில்வே பிளாட்பாரத்துலே கிடந் தீங்களாமே... அப்பா உங்களுக்கா இந்த கதி...? டால்ஸ் : அலெக்ஸான்ட்ரியா வா... விதி விசித்திரமான தம்மா. எனக்குரிய தண்டனை கிடைத்ததில் எனக்கு சத்தியமா சந்தோஷம்தாம்மா. பிளாட்பார மனிதர்கள் ரொட்டி வாங்கக்கூட காசில்லாம தவிச்சபோது போலித் தனமாய் புத்தகங்கள் எழுதி அவங்க ரொட்டி வாங்கற காசையும் புத்தகம் வாங்கும்படியா செய்தேன். இப்படி பாமர மக்களின் பணத்தைப் பறிச்ச பாவி நான். அலெக்ஸ் : அப்படிச் சொல்லாதீங்க அப்பா. பாமர மக்களுக்கு அவர்கள் உணவை பறிப்பது யார்னு அடையாளம் காட்டிய மகான் நீங்க... இல்லையென் றால் இவ்வளவு ஜனங்க வந்து கூடியிருப்பாங்களா? டால்ஸ் : சாகும்போதாவது என்னை தற்பெருமை இல் லாம சாகவிடம்மா. போகட்டும், அம்மா எப்படி இருக்கிறாள்? அலெக்ஸ் : நீங்க எழுதி வச்சிட்டு வந்த கடிதத்தை படிச்சிட்டுக் கதறினா. எப்பப் பார்த்தாலும் லியோ,