பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 + லியோ டால்ஸ்டாய் லியோ’ங்கிற வார்த்தை தவிர வேறு எதையுமே பேசலே. அதைப் பார்த்த எனக்கே அழுகை வந் திட்டுது. ஜென்ம எதிரியா நினைச்ச செர்ட்கோவைக் கூட தன்னை மன்னிச்சுடும்படியா மன்றாடினாள்... அவளுக்கு இப்போ டயரி முக்கியமில்லே. ஏன் அவளே முக்கியமில்லே... நீங்கதான் முக்கியம்... அவள் உள்ளம் உடம்பு முழுவதும் நீங்கதான் வியாபிச்சிருக்கீங்க. செர்ட் : என் பிரபுவே... என் குருவே... (செர்ட்கோவ் வருகிறார்) டால்ஸ் : வா செர்ட்கோவ். என்னை லியோன்னு கூப்பிடு. நான் உனக்கு வணக்கம் சொல்லலே. இதுலேயிருந்தே நீ எனக்கு அந்நியன் இல்லேன்னு தெரிய வேண்டாமா? செர்ட் : நான் பாவி... நீங்க இந்த நிலைமைக்கு வர நானும் ஒரு காரணமாயிட்டேன். காஷா : செர்ட்கோவ் - ஏற்கெனவே அவருக்கு இதயத் துடிப்பு அதிகமா இருக்கு. அதைக் குறைப்பதற்கு பதிலா இப்படி அழுதால் எப்படி..? செர்ட் என் லியோவிற்கு என்ன மருந்து தேவைன்னு எனக்குத் தெரியும். நீங்க எழுதின புனர்ஜன் மத்தை மூடி (Moody) என்கிற வெள்ளைக்காரர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க உரிமை கேட்டிருக் கிறார். 500 ரூபிள் தருவாராம். டால்ஸ் : ஆமாம்... என் படைப்புகளை அவர் பணம் தராமலேயே வெளியிடலாம். இருந்தாலும் நான் நம்ம