பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்குருதி நீராடித் திளைத்திருந்த பெருநிலத்தை, அங் கந்த வலியகரம் ஆட்படுத்திக் கொண்ட துகாண் முக்குக் கன்னர டி. முகத்தணிந்து, நல்லுடைகள் ஷோக்காகத் தரித்திருக்கும் சொகுசுப் பேர்வழிகள் மாச்சரியம் கொண்டே வாய்நாறித் துப்பிவிட்டு, ராச்சியங்கள் மிஞ்சி நிற்கும் நாடுகட்கு ஓடி விட்டார், தொலைந்தவரை நல்லதுதான்! இனிமேலே தொழிலாளர் நலம் பெறுமோர் விதந்தன்னில் நாடுதனை ஆன்கின்ற சாதனையை, இந்நாட்டுச் சமையற் காரி கட்கும் போதிப்போம்! இவ்வு s கைப் பொன்னுல்காய் மாற்றிடுவோம்! வெம்போரை நிறுத்துங்கள்! வெளியேறி வந்தண்ணன் தம்பிகள் போல் எங்களுடன் சங்கமித்து வாழுங்க! என்றே ஜெர்மனியர் காதுகளில் எடுத்துரைத்தோம்; எழுத்தாலும், அச்சிட்ட இதழாலும், யுத்தகளக் குழிக்குள் படுத்தவணம் கூச்சலிட்டும், சூரல்கொடுத்தும்