பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மல) டயன் தான் இத்த 65 கய வேளையில் சிந்திப்பான்? கடைகெட்ட கயவருக்குக் கருளோடென்ன? இவர்க்கெல்லாம் தடையற்ற வல்லுருக்குச் சர்வாதி காரமொன்றே விடையாகும்! அதுவொன்றே வெற் றிக்கும் வழிகாட்டும்? வெற்றிகண்டோம். என்றாலும், யாமிருந்த கப்பலதோ முற்றாகப் பழுதுபட்டு மூளியென நின்றதுவே. மேனியெல்லாம் ஓட்டைகளாய், விரிசல் நெளிசல்களாய்த் தானிருக்க, சட்டங்கள் தகர்ந்து பொடிந்திருக்க, எந்திரங்கள் துடிப்போய்ந்து இறப்பதற்குக் காத்திருக்க, பொந்து சந்தை அடைப்பதற்கும் 'போக்கற்றுத் தானிருக்க, நீரில் முடங்கிப்போய் - நெட்டுயிர்த்து நின்றதுவே. வாருங்கள்! கப்பலிதன் வருத்தத்தைத் தீருங்கள்! செப்பனிட்டுச் சீர்படுத்தித் திருத்தங்கள் செய்திந்தக் - --கப்பலினை மீட்டுமந்தக் கடல் மீது செலுத்துங்கள்!