பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத் தரையில் சிறந்தோங்கி இருந்துவரும். இதில்பத்து வருடத்தில் குறுக்கிட்ட வாதனையும் வேதனையும் ஒருபொருட்டோ ? ஆதலினால், உறுதியிலே தளராது முன்னே றிச் சென்றிடுவோம். இடைவழியில் வந்துற்ற என். இ பி. * 1 சங்கடங்கள் இறந்துபடும்; மறைந்துவிடும். மெல்ல மெல்லப் பணியாற்றி மெதுவாகக் கட்டி வந்தால், வல்லமையில் வா மெழுப்பி வருகின்ற மாளிகையும் பன்னூறு மடங்காகப் - பலம் பெற்று நிலைத்திருக்கும், இன் னுமிங்கு *தனியுடைமை" ஒருசி றிதே இருப்பதனால் முன்னேறும் வேகமது

  • முடங்குவதும். வாஸ்தவம்தான்.

என்றாலும், உலகெங்கும் எழுந்தோங்கும் புயல்வரவை முன்தோன்றி அறிவுறுத்தும் கறுத்திருண்ட முகிற்கூட்டம் தன்னில், ஏற்கெனவே . சட்டச் சடாரென்று மின்னல் பளிச்சிட்டு - வெட்டுவதைக் காண் கின்றோம். எதிரிகளில் பழையவர் கள் புதியவர்க்கு இடம்கொடுத்து 112