பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவைப் பெருமோனம் Sறுக்கென்று அடக்கியதே. அந்நேரம் காலினீனோ அலை யெழும்பும் உணர்ச்சிகளைத் தன்னுள் புதைத்தவராய்த் தடுமாறி எழுகின்றார். ஆனாலும், பெருகிவரும் கண்ணீர் அருவியதோ தானாகக் கன்னத்தும் தாடியிலும் வழிந்தோடித் துளித்துளியாய்ப் பளபளக்கத் தொடங்கியதே. துயரத்தை ஒளித்து வைப்பதற்கோ அவராலும் ஒண்ண வில்லை.. பொருத்தெல்லாம் செங்குருதி புகுந்து புடைப்பேற. வருத்தத்தை மறைப்பதற்கு வழியற்றும், தமக்குள்ளே நிலைகுழம்பிப் பொங்கிவரும் நினைவுகளைப் புரிந்து கொளும் வலியற்றும் இவ்வாறு வாய்நேர்ந்தார்: சநேற்றைக்கு மரீ ஆறு ஐம்பதுக்கு மாமேதை தோழர் லெனின் மாண்டுவிட்டார்!......' 14 பன்னூறு ஆண்டுகளும் பார்க்க வொண்ணா அவல்மொன்றைக் 119