பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதயம் கவர்ந்தவரே! வாழ்ந்திருப்பீர்! எழில்வாழ்வை அதற்குள்ளே முடிப்பதற்கு அவசியமே இல்லை! என்று இதமாகச் சொல்வதுபோல் இருக்கிறது. அற்புதமாம் புதுமை செயும் ஒருமனிதன் பொட்டென் று வாய்திறந்து

  • இவருக்காய் நாங்களெலாம்

இப்போதே இறந்துபட்டால், இவர் பிழைத்து எழுந்திடுவார்" என்றுரைத்து விட்டக்கால், தெருக்களெலாம் அணைகடந்து திரண்டெழுந்து, மக்களெ லாம் மரிப்பதற்கே தயாராகி மகிழ்ச்சியுடன் வந்திடுவார். ஆனாலும் இத்தகைய அற்புதங்கள் நேர்வதில்லை. வீனான கனவு அவர் மீட்டுவரப் போவதில்லை. தலைவர் லெனின்- அவர் சடலம் தானிருக்கும் சவப்பெட்டி- நிலைகுலைந்து மணந்துவண்டு நிற்குமெங்கள் நெடுந்தோள் கள்- இde) வயன்றி வேறில்லை. லெனினவரோ இறுதிவரை புவிமனிதர் யாவரையும் போல் வாழ்ந்தே உயிர் நீத்தார். ஆதலினால், இதயத்துள் அனலாகக் கொதித்தெழும்பும் 12)