பக்கம்:லேசர் அறிவியல்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. இலேசரின் வரலாறும் வளர்ச்சியும் சீரும் சிறப்பும் இருபதாம் நூற்றுண்டின் இணையற்ற புனைவு இலேசர். 40 ஆண்டுக்கு மேற்பட்ட முறையான வரலாறு இதற்குண்டு. தவிர, இஃது அரிய தொழில் நுணுக்கச் செறிவும் சீரிய அறிவியல் நுட்பமும் உடையது. ஆர்க்கிமெடிசின் ஆர்வம் இலேசர் நெறிமுறைக்கு வித்திட்டவர் சிறந்த கிரேக்க அறிவியல் அறிஞரான ஆர்க்கிமெடிஸ் என்பவர் ஆவார். கி.மு.212-ல் உரோமானியக் கப்பல்கள் கிரேக்க நகரமான சிராகுயுசை முற்றுகையிட்டன. அப்பொழுது பெரிய ஆடிகளைக் கொண்டு பகலவன் ஒளியை மறித்து, அவற்றை அழிக்கலாம் என்னும் கருத்தேற்றத்தினைக்கூறி, அவர் அதனைச் செயல்படுத்த முனைந்தார். ஆனால், அது பயனளிக்கவில்லை. அவ்வொளி கப்பல்களை எரிக்கும் அளவுக்குத் தற்கால இலேசர் ஒளிபோல் ஆற்றல் உடையதுதானா என்பதை அவர் அறிந்தாரில்லை. இக்குறையினை அவருக்குப் பின் வந்த நியூட்டன், பிரஸ்னல், மாக்ஸ்வெல், மாக்ஸ்பிளாங்க் முதலிய அறிவியலார் ஆராய்ச்சிகள் போக்கின. ஆக, ஆர்க்கிமெடிஸ் கருத்து, பல நூற்றுண்டுகள் கழித்து உயிர்பெற்று, இன்று இலேசர் நெறி முறையாகியுள்ளது எனலாம். ஜன்ஸ்டினின் ஆக்கம் அறிவியல் உலகில் அழியாப் புகழ் பெற்ற அறிஞர் ஜன்ஸ்டின் தம் கிளர்வு வெளியேற்றக் கொள்கையினை, ஒளித்துகள் கொள்கையை வளர்க்க 1917-ல் அறிமுகப்படுத்தினார். இச்சீரிய பணிக்காக அவர் 1921-ல் நோபல் பரிசு பெற்றார். இத்துறையில் நீல்ஸ் போர், இராமன், கேம்படன் முதலிய அறிவியலாரின் சிறந்த பணி இங்கு நினைவுகூரத்தக்கது. இக்கொள்கை இலேசரின் பெருக்குபொறி நுட்பமாக அமைந்துள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/12&oldid=886940" இலிருந்து மீள்விக்கப்பட்டது