பக்கம்:லேசர் அறிவியல்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 வெளிப்படவில்லை. மாறாக, மூளையணுக்கள் பலத்த அதிர்வுகளுக்கு உட்பட்டிருந்தது புலனாயிற்று, இந்த ஆய்வும் இலேசர் வளர்ச்சிக்கு அடிகோலியது. முதல் விளக்க ஆய்வு 1960-ல் டாக்டர் டி.எச். மெய்ம்மன் என்பார் ஒரு சிவப்புத் தண்டினை அமைத்து, ஆற்றல் வாயந்த ஒருங்கிைைணந்த ஒளிக்கற்றையை அதன்மூலம் வெளிப்படுத்தினார். இக்கருவி அலுமனியம் ஆக்சைடு, குரோமியம் ஆகியவற்றாலானது. இதுவே விளக்கிச் செய்து காட்டப்பட்ட முதல் இலேசர் ஒளிக்கற்றையாகும். இந்தியாவில் இலேசர் வளர்ச்சி 1968-ல் இந்தியாவில் இலேசர் வளர்ச்சி தொடங்கியது. தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடம், இந்திய அறிவியல் நிறுவனம், சென்னை, கான்பூர் இந்தியத் தொழில் நுணுக்க நிறுவனம், டெஃகராடுனில் உள்ள ஐஅர்டிஇ பாபா அணு ஆராய்ச்சி மையம், பாதுகாப்பு இயற்பியல் ஆய்வுக்கூடம் ஆகியவை இலேசர் வளர்ச்சிக்குக் கால்கோள் செய்தன. ஓராண்டிற்குள் குறைந்த ஆற்றல் உள்ள வளி இலேசர் மேற்கூறிய நிறுவனங்களின் ஆய்வுக்கூடங்களில் உருவாகி இயங்கியது. அடுத்த சில ஆண்டுகளில் இதன் வளர்ச்சிக்கு அடிப்படைக்காரணமாக இருந்தது இந்திய அறிவியல் நிறுவனத்தைச் சார்ந்த மையக் கருவி பணி ஆய்வுக்கூடமாகும். இலேசருக்கு வேண்டிய புறப்பகுதிகளை மையக்கருவிபணி ஆய்வுக்கூடம் ஆக்கித்தந்தது. உட்பகுதிகளான வளிக்கலவை, சிவப்புப்படிகம் ஆகியவை வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இவற்றைக் கொண்டு இலேசர் ஆக்கும் பணியில் அஃது ஈடுபட்டுவருகிறது. - பாபா அணு ஆராய்ச்சி மையம், இந்தியத் தொழில் நுணுக்க நிறுவன இலேசர் செய்தித் தொடர்பு ஆய்வுக்கூடம், திருவனந்தபுர விக்ரம் சரபாய் வான வெளி மையம் முதலிய ஆராய்ச்சி நிலையங்களும் இலேசர் வளர்ச்சியில் தங்களை முழுவதும் ஈடுபடுத்திக் கொண்டுள்ளன. இந்நிறுவனங்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/14&oldid=886944" இலிருந்து மீள்விக்கப்பட்டது