பக்கம்:லேசர் அறிவியல்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 இலேசர் எல்லைக்காணி முதலிய இலேசர் கருவிகளும் செய்யப்பட்டுள்ளன. முன்னரே கூறியதுபோல, இலேசர், அதிகத் தொழில் நுணுக்கச் செறிவு கொண்டது. அமெரிக்கா, உருசியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா முதலிய முன்னேறிய நாடுகளில் அது நன்கு வளர்ந்துள்ளது. இந்தியா அந்நிலையை இன்னும் எட்டவேண்டிய கட்டத்திலேயே உள்ளது. இந்திய அறிவியலறிஞர் பணி மராட்டிய மாநிலத்தைச் சார்ந்த டாக்டர் சி. குமார் படேல் இலேசர் துறையில் ஆற்றியுள்ள அரும்பணி இங்குக் குறிப்பிடத்தக்கது. இதற்காக அமெரிக்க ஒளி இயல் கழகம் அவருக்குப்பதக்கமளித்துப் பாராட்டியது மிகவும் மகிழ்வுக்குரிய செய்தியாகும். 1966. மார்ச்சு 17-இல் வாஷிங்டன்னில் நடந்த அதன் 50-வது ஆண்டுக்கூட்டத்தில் அடால்ப் லோம்ப் பதக்கம் அவருக்கு அளிக்கப்பட்டது. டாக்டர் பட்டேல் 14வது விருதாளராக அதனைப் பெற்றார். பதக்கத்தைத் அளித்து அக்கழகம் புகழ்ந்து கூறியதாவது: "அவர்தம் அகவையைக் கருதாது பார்க்கும்பொழுது, கொள்கை அளவிலும் ஆய்வு நிலையிலும் டாக்டர் பட்டேல் ஆற்றிய தொண்டு மிகச் சில அறிவியல் அறிஞர்களாலேயே ஆற்றமுடியும் என்பது கண்கூடு”. வேறுபட்ட 12 வளிச்சேர்ப்புகளைச் கொண்ட 200 இலேசர் மாறுநிலைகளை அவர் கண்டறிந்துள்ளார். மேலும், அவர் பல இலேசர் தொகுதிகளையும் அமைத்துள்ளார். நீளச்சார்பிலா ஒளி நிகழ்ச்சிகளையும் வளி இலேசர் தூண்டல் பற்றிய பல பொறிநுட்பங்களையும் அவர் ஆராய்ந்துள்ளார். பாய்ம வளி இலேசரையும் அவர் புனைந்துள்ளார். . அகச்சிவப்பு அதிர்வெண்களில் உயர்ந்ததும் தொடர்ச்சியாகவும் உள்ள ஆற்றல் வெளிப்பலனையும் இலேசரின் மிக உயர்ந்த ஆற்றல் மாற்று திறனையும் பெற, மூலக்கூறுகளின் அதிர்வாற்றல் மாறலை, முதல் தடவையாக இந்த இலேசர் பயன்படுத்தியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/15&oldid=886947" இலிருந்து மீள்விக்கப்பட்டது