பக்கம்:லேசர் அறிவியல்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 இவ்வாறு நோபல் பரிசு பெற்ற பல அறிவியல் அறிஞர்களாலும் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்களாலும் உருவாக்கியதுகள் கொள்கையின் அடிப்படையில் அமைந்ததே வியத்தகு இலேசர் ஆகும். ஆகவே, அஃது அருமையும் பெருமையும் உடையதே. 2. இலேசரின் அமைப்பும் இயங்கும் முறையும் சொல் விளக்கம் 1952-ல்நுண்ணலைகளைப் பெருக்கும் கருத்தினை டாக்டர் டவுனிஸ் வெளியிட்டார். இந்த நெறிமுறையினை அவர் மேசர் என்னும் பெயரால் குறித்தார். 1954-ல் அவர் இயங்கும் முதல் இலேசரை அமைத்தார். இதனையே அலக்சாண்டர் புரோக்கரோவும், நிகோலய் பாசவும் செய்தனர். அவ்வாறு அவர்கள் உருவாக்கிய கருவியமைப்பு அமோனிய வளி இலேசர் ஆகும். மேசர் என்னும் சொல் ரேடார் போன்று முதலெழுத்துச் சுருக்கத்தாலானது. தான்குறிக்கும் கருவியமைப்பின் வேலையை அது விளக்குகிறது. அதன் விரிவு கதிர்வீச்சுக் கிளர்வு வெளியேற்றத்தால் உண்டாகும் நுண்ணலைப் பெருக்கம் என்பதாகும். இலேசரின் விரிவோ கதிர்வீச்சுக் கிளர்வு வெளியேற்றத்தால் உண்டாகும் ஒளிப்பெருக்கம் என்பதாகும். மேசரா இலேசரா? மேசரில் நுண்ணலையும் இலேசரில் ஒளியும் பெருக்கம் அடைகின்றன. அலைநீளங்கள் செண்டிமீட்டரிலிருந்து மைக்ரான்களுக்கு மாறின. மைக்ரான் அலைவரிசையினை அடுத்து நிறமாலையின் தெரியும் பகுதி தொடங்கிற்று. இப்பொழுது மேசர் இலேசரானது. இது ஒளிப் பகுதியில் நிறைவான ஒருங்கிணைந்த கதிர்வீச்சு மூலமாகும். முதன்முதலில் வழக்கேறிய சொல் மேசர். பின் அதன் இடத்தை நிலையாகப் பிடித்துக் கொண்டது இலேசர் ஒரு நிலையில் ஒளிக்கற்றை என்பதும் மற்றெரு நிலையில் கருவியமைப்பு என்பதும் இலேசரின் பொருளாகும், ஆக, அடிப்படையில் மேசரும் இலேசரும் ஒன்றே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/16&oldid=886949" இலிருந்து மீள்விக்கப்பட்டது