பக்கம்:லேசர் அறிவியல்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெறிமுறை பொருள்கள் அணுக்களாலானவை. அணுக்கள் வேறுபடும் ஆற்றல் அளவுகளைக் கொண்டவை. அவற்றில் ஒரு சிலவற்றிற்கு ஆற்றல் அளவுகள் அதிகமாகவும் மற்றும் சிலவற்றிற்குக் குறைவாகவும் இருக்கும். ஒளி, மின்சாரம் முதலிய வெளிப்புறத்தூண்டல்கள் மூலம் அணுக்களின் ஆற்றல் நிலையினைக் கூட்டவோ குறைக்கவோ இயலும் அதிக ஆற்றலுடைய அணுக்கள் தூண்டலுக்கு உட்படும் பொழுது, அவ்வாற்றல் கண்ணுக்குப் புலனாகும், ஒளியாக வெளிறுேம். இதுவே துண்டல் அல்லது கிளர்வு வெளியேற்றம் என்பது இந்நெறிமுறையில் அமைந்ததே இலேசர். இதனோடு தொடர்புடையது கேம்டன் விளைவு 100% இலேசர் பாய் குறை மறிப்பான் கோல் ஒளிக்குழல் மறிப்பான் / மறித்த முடுக்கு வெளியேறு ஒளிக்கற்றை மின்வாய் கற்றை சிவப்புக்கல் இலேசர் இலேசர் கருவியின் அமைப்பு இங்குத் திண்ம இலேசரின் எளிய அமைப்பு பற்றிக் காண்போம். சிவப்புக்கல் அல்லது படிகம் இதன் இதயம். இது தண்டு வடிவத்தில் இருக்கும். இதைச் சுற்றி ஒளிவீசுகுழல், சுருள் வடிவத்தில் அமைந்திருக்கும்.துண்டும் மின்வாய்களைச் சுருள் கொண்டிருக்கும். தண்டிற்கு எதிரே இரு புறங்களிலும் ஒளியை மறிக்க ஆடிகள் இருக்கும். அவை, அனைத்தும் உரிய சட்டத்தில் பொருந்தி இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/17&oldid=886950" இலிருந்து மீள்விக்கப்பட்டது