பக்கம்:லேசர் அறிவியல்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 திண்ம இலேசர் இயங்குதல் ஒளிவீசுகுழலிலிருந்து ஒளி வீசப்படுகிறது. இது சிவப்புக் கல்லிலுள்ள மின்னணுக்களை வலுவாகத்துண்டுகிறது. இதனால் ஒற்றையலை நீளமுடைய ஒளி உண்டாகிறது. இஃது இலேசரின் உள்ளே அமைந்துள்ள ஆடிகளால் முன்னும் பின்னும் மறிக்கப்படுகிறது. இச்செயலினால் அதன் செறிவு அதிகமாகிக் குறுகிய சிவப்பு நிறக்கற்றையாக அது வெளியேறு கிறது. ஒளியைப் பெருக்குவது மட்டுமல்லாமல், இலேசர் அதனைத் தூய்மைடையவும் செய்கிறது. மின் காந்த மாலையின் அகச்சிவப்புப் பகுதியில், இலேசர் இயங்குகிறது. இப்பகுதி கண்ணுக்குப் புலப்படக்கூடிய சிவப்பொளிக்கும் மிகக் குறுகிய வானொலி அலைக்கும் இடையிலுள்ளது ஆகும். வளி இலேசர் இயங்குதல் 1961ல் பேரும் புகழும் மிக்க பெல் ஆய்வுக்கூடங்களைச் சார்ந்த டி.ஆர். ஹேரியட், டபிள்யூ ஆர். பென்னட் அலி ஜாவான் ஆகியோர் தொடர்ச்சி அலையுள்ள ஈலியம்-நியான் இலேசரை அமைத்தனர். இந்த இலேசரின் நியான் அணு இரு இடைப்பட்ட நிலைகளுக்கிடையே விழுவதால், கிளர்வு வெளியேற்றம் நடைபெறுகிறது. இவ்விரு நிலைகளில், கீழ்நிலை, அடிநிலைக்கு மேல் இருக்கும். む اه . يع ۲۲ الی ه به این معاهایی را کا ሰJሃ‛ ~0 GAG (or 3. لدهم له لها வில: % وع با کاله بی لہ 9 ویے_

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/18&oldid=886952" இலிருந்து மீள்விக்கப்பட்டது