பக்கம்:லேசர் அறிவியல்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 உள்வரும் ஒளியணுவினால் தூண்டிய நிலையினைப் பெற வேண்டிய ஆற்றல் கிடைப்பதில்லை. மாறாக ஒளியணு தூண்டிய ஈலிய அணுவோடு மோதுவதால், அது கிடைக்கிறது. உயர் அதிர்வெண் அலைகளில் ஈலிய அணுதுண்டப்படுகிறது. இலேசரின் படிகக்குழாயில் உள்ள புற மின்வாய்களினால் வளிக்கலைவையில் மின்காந்தப் புலம் உண்டாகிறது. அதிக மின்னழுத்தமுள்ள இருதிசை மின்னோட்டத்தினால் இது இயக்கப்படுகிறது. இதனால் பிளாஸ்மாநிலை உண்டாகிறது. பிறகு குறைந்த மின்னழுத்தமுள்ள ஒரு திசை மின்னோட்டத்தினால் பிளாஸ் மாநிலை நிலை நிறுத்தப்படுகிறது. பிளாஸ்மா (கணிம நிலை என்பதுமிகு வெப்பநிலைகளில் பொருள் உள்ள நிலையாகும். இதனைப் பொருளின் நான்காம் நிலை எனலாம். ஏனைய மூன்று நிலைகள் திண்ம, நீர்ம, வளி நிலைகளாகும். கணிம நிலையில் எல்லா அணுக்களும் தங்கள் மின் அணுக்களிலிருந்து விடுபட்டுத் தூய அயனிகளாகின்றன. கணிமநிலை என்பது புதிய கருத்தாகும். மிகு வெப்பநிலை ஆய்வுகளால் இஃது உருவாகியது. முடுக்குமின்னழுத்தம் ஈலியம்-நியான் இலேசருக்கு 5.7 கே.வி. வரையிலும், கார்பன் டை ஆக்டைடு இலேசருக்கு 10 கே.வி. வரையிலும் இருக்கும். நிலைநிறுத்து மின்னழுத்தம் 2 கேவி வரை இருக்கும். இலேசர் ஒளிக்கற்றையின் இயல்புகள் இலேசர் ஒளி ஒரு தனிவகை ஒளிமட்டும் அன்று ஒளி ஊற்றுமாகும். இக்கற்றையின் முனைப்பான சிறப்பியல்புகள் பல. அவாற்றில் ஒரு சில பின்வருமாறு: 1. இலேசர் ஒளிக்கற்றை ஒற்றை அலை நீளம் உடையது. அதாவது அஃது ஒரு தனி அலைநீளம் மட்டும் கொண்டது. அதிக அதிர்வெண்களில் இயங்குவது. 2. அது முனைப்பான ஒருங்கிணந்த கற்றையாகும். ..ہی . vہ<G

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/19&oldid=886955" இலிருந்து மீள்விக்கப்பட்டது