பக்கம்:லேசர் அறிவியல்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 3. அது சிதறல் இல்லாத ஒரு போக்குக்கற்றையுமாகும். அது நீர் வில்லை, ஒளி வடிக்கட்டிகள் ஆகியவற்றில் குறைவாகச் சிதறும். 4. அஃது ஒரு திசையிலேயே தவறாமல் செல்லக்கூடியது. 5. அது வெப்பத்தை உண்டாக்கவல்லது. அதிகச் செறிவுமிக்கது. அதன் ஆற்றல் செறிவு ஒரு சதுரமீட்டருக்கு நூற்றுக்கணக்கான கிலோவாட்டுகள் ஆகும். 6. அதன் செறிவு மிக்க ஒளி, மிகக்குறுகியதுளை வழியாகவும் செல்லக்கூடியது. இச்சிறப்பியல்புகளால் டிரான்சிஸ்டர் போன்று, இலேசர் அறிவியலின் பலதுறைகளிலும் பயன்படுகிறது. இலேசரின் மாண்பு குறிப்பிட்ட எந்தக் கண்டு பிடிப்பும் அறிவியல்துறையில் புரட்சியினை உண்டு பண்ணக்கூடியது. இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டு இலேசர். இலேசர் அமைக்கப்பட்டது அறிவியல் அருஞ்செயல்களில் ஒன்று. இதனால் இயற்பியல் கொள்கையினைத் தொழில் நுணுக்கச்சிக்கலுக்குத்தீர்வு காணப் பயன்படுத்த முடிகிறது. டிரான்சிஸ்டரைக் காட்டிலும் இலேசர் புரட்சிகரமான புனைவே, அது பல தொழில்நுணுக்கப்பயன்களைக் கொண்டது. அது தொழில் நுணுக்க இயலின் ஓர் இன்றியமையாக் கருவியாகிவிட்டது. ஒரு புள்ளி விபரப்படி 400 அமெரிக்க அறிவியல் கூடங்களில் 2000 அறிஞர்கள் இலேசர் பற்றி ஆராய்ந்து வருகின்றனர். இஃது அதன் மாபெரும் மாண்பினையே காட்டுகிறது. - இலேசர் ஒரு பெருக்கி ஆகும். வானொலி, ரேடார், தொலைக் காட்சி ஆகியவற்றில் மின்காந்த அலைகள் பயன்படுகின்றன.இலேசரில் ஒளியே பயன்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/20&oldid=886958" இலிருந்து மீள்விக்கப்பட்டது