பக்கம்:லேசர் அறிவியல்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. இலேசரின் வகைகளும் இலேசர் பொருள்களும் இலேசரில் பயன்படும் ஊடுபொருள், அஃது இயங்கும் அலைநீளம் ஆகியவற்றைப் பொறுத்து, அதனை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம். அவை பின்வருமாறு. திண்ம இலேசர்கள் இவற்றிற்குச் சிவப்புக்கல் இலேசர் எடுத்துக்காட்டு இதில் ஊடுபொருள் சிவப்புக்கல் டாக்டர் மெய்ம்மன் அமைத்த இலேசரின் அமைப்பு இங்கு நோக்கத்தக்கது. இதில் பயன்படுத்திய சிவப்புக்கல் தண்டு வடிவத்தில் இருந்தது. இதிலுள்ள அலுமினியம் ஆக்சைடில் 0.5% குரோமியம் சேர்ந்திருந்தது. இத்தண்டின் நீளம் 4 செ.மீ. குறுக்களவு, 5 செ.மீ. ஒளிவீசுகுழாயிலிருந்து கிளம்பிய ஒளி குரோமிய அணுக்களைத்தூண்டியதால் ஒளியணுக்கள் 943 ஆங்கஸ்ட்ராம் அலைநீளத்தில் அதிவிரைவில் அருவிபோல் உண்டாயின. இந்த அருவி ஒரு வினாடிக்கு அரை ஆயிரம் பங்கு அளவுக்குச் செறிவான சிவப்பொளியினை உண்டாக்கியது வியப்பிற்குரியது. பாதியளவுக்கு ரசம் பூசப்பட்ட சிவப்புத்தண்டின் முனைகளிலிருந்து ஒளிகிளம்பியது. இவ்வகை இலேசரில் ஒளி தொடர்ச்சியாக வராது. . நீர்ம இலேசர்கள் இவற்றின் ஊடுபொருள்கள் நீர்மப் பொருள்கள். இவற்றில் ஒளி தொடர்ச்சியாக வரும். இவை திண்ம, வளி இலேசர்களைக்காட்டிலும் சிறந்தவை. இவற்றில் பூச்சுப் பூசுவது அவ்வளவு சிக்கலான செயலன்று. ஏனெனில் புறத்தேயுள்ள வெப்பமாற்றியினால் தேவையான வெப்ப நிலையினைப் பெறமுடியும். இவற்றில் எந்த அதிர்வெண்ணிலும் கண்ணுக்குப் புலப்படும் பகுதியிலும் அகச்சிவப்புப் பகுதியிலும் ஒளியினை உண்டாக்க இயலும் இதுவே இவற்றின் பெருமை. வளி இலேசர்கள் இவற்றிற்கு அம்மோனிய வளி இலேசர் எடுத்துக்காட்டு, இவற்றில் வளி அல்லது வளிக்கலவை பயன்படுகிறது. இவைகளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/21&oldid=886959" இலிருந்து மீள்விக்கப்பட்டது