பக்கம்:லேசர் அறிவியல்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 குறைந்த தூண்டும் ஆற்றலுடன் ஒளி தொடர்ச்சியாக உண்டாகிறது. அதிக ஒற்றை அலைத் தன்மை, தூய நிறமாலை, அதிகச் சிவப்புள்ள அதிர்வெண் ஆகிய சிறப்பியல்புகள் இவை உண்டாக்கும் கதிர் வீச்சுக்குண்டு. இச்சிறப்பியல்புகளால் இவை அறிவியல் பணிக்கும் செய்தித் தொடர்பிற்கும் அதிகம் பயன்படுகின்றன. ஈலியம்-நியான் வளி இலேசர்கள் பல ஆய்வுக்கூடங்களில் வேறுப்பட்ட வகைகளில் பயன்படுகின்றன. ஏனெனில் அவை குறைந்த ஆற்றலை அளிக்கக்கூடியவை. 6328 என்.எம்இல் தொடர்ச்சியாகச் சிவப்புக்கற்றையினை அளிக்கவல்லவை. இவை பாகங்களை இணைக்கப் பயன்படுகின்றன. அதிக மின்னோட்டச் செறிவுகளைப் பயன்படுத்தி, அணு அயனிகளில் இலேசர் மாறு நிலைகளைத்தூண்டலாம். இவ்வடிவப்படையில் அமைந்தமிகப் பொதுவான இலேசர் ஆர்கன் அயனி இலேசர் ஆகும். கண்ணுக்குப் புலப்படக்கூடிய ஒளி நிறமாலையின் நீலப்பசும்பகுதியில், பல தனி அலைநீளங்களை, இஃது உண்டாக்குகிறது. கார்பன்-டை-ஆக்ஸைடு இலேசர் சிறிது வேறுப்பட்டது. கார்பன் டைஆக்ஸைடு மூலக்கூறுமட்டங்களின் அதிர்வுச் சுழற்சி மட்டங்களுக்கு இடையே இலேசர் மாறுநிலை உள்ளது. அதிர்வினால் தூண்டப்பெற்ற மூலக்கூறுகளில் மோதலினால் உண்டாகும் ஆற்றல் காரணமாக, இந்த இலேசர்கள் தூண்டப்படுகின்றன. ஆற்றல் மட்டங்கள் தாழ்வாகவும், தூண்டல் குறிப்பிடக்கூடியதாகவும் இருப்பதால், இந்த இலேசர்கள் அதிக இயங்குதிறன் வாய்ந்தவை. அரைக்கடத்தி இலேசர்கள் இவற்றை ஒரு வழிக்கடத்தி இலேசர்கள் என்றும் கூறலாம். மின்சாரத்தை ஒரு திசையில் மட்டும் கடத்தும் பொருள்கள் அரைக்கடத்திகள் அல்லது ஒரு வழிக்கடத்திகள் ஆகும். இவற்றிற்கு ஜெர்மானியம், சிலிகன், செலினியம் முதலியவை எடுத்துக்காட்டுகள். 60 - 70% இயங்கும் திறன் இவற்றின் உயரிய சிறப்பு. இத்திறனனை 99% அளவுக்கு உயர்த்த இயலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/22&oldid=886961" இலிருந்து மீள்விக்கப்பட்டது