பக்கம்:லேசர் அறிவியல்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 காந்தப்புலத்துணையுடன் இவற்றின் கதிர்வீச்சு அதிர்வெண்ணில் எளிதாக மாற்றம் ஏற்படுமாறு செய்யலாம். அதே சமயம் வெளியேறு அதிர் வெண்ணில் அதிக நிலைப்பினையும் இவை அளிக்க வல்லவை. இவை மின்சாரத்தினால் தூண்டப்படுகின்றன. தூண்டு மின்சாரத்தைச் சரிசெய்வதன்மூலம் அதிர்வெண் உரத்தினை மாற்ற இயலும் இருப்பினும் இவற்றின் வெளியேறு ஆற்றல் அவ்வளவு அதிகம் என்று கூறுவதற்கில்லை. அதே போன்று ஒளிக்கற்றையின் ஒற்றை அலைத்தன்மை, ஒரு போக்குத்தன்மை ஆகியவையும் நன்முறையில் இல்லை. இவை இரண்டும் திண்ம வளி இலேசர்களில் நன்கமைந்துள்ளன. ஒத்திசையும் இலேசர்கள் இவை புதிய இலேசர்கள். இவற்றிற்குக் கிளர்படிய இலேசர்கள் என்னும் பெயருண்டு. ஒரு தூண்டப்பட்ட இருபடியத்திற்குக் கிளர்படியம் என்று பெயர். ஒத்த இருமூலக்கூறுகளின் சேர்க்கையினால் இது உண்டாவது. குறுகிய கால அளவுக்குக் கலவைநிலையில் இருக்கக்கூடியது. கதிர் வீச்சுச் செயல் கலவை நிலையைப் பிளக்கக்கூடியது. இப்பண்பு இலேசருக்கு மிகப் பயனளிக்கக்கூடியது. ஏனெனில் கீழ்மட்டங்களில் வளியினால் தூண்டப்பட்ட கிளர்வு மீண்டும் கவரப்படுவதில்லை. இத்தகைய இலேசர்களின் அலைநீளங்களை விரிந்த எல்லையில் மாறுபாடு அடையுமாறு செய்யலாம். அதாவது, இவை ஒத்திசையும் இலேசர்கள் ஆகும். முதன்மையான கிளர்படிய இலேசர்கள் செனான், ஆர்கான், கிரிப்டான் புளோரைடு ஆகியவை ஆகும். ஒத்திசையும் இலேசர்களில் பயன்படும் பெருமித வளிகள் செனானும் ஆர்கனும் கிரிப்டானும் ஆகும். இவற்றின்துாண்டிய நிலைகள் தூண்டப்படாத அணுக்களின் இயல்பான மந்தத் தன்மையினைக் காட்டுகின்றன. இத்தகைய இலேசர்களில் எம் இவிஇல் மின் அணுக்கள் வெளியேறுவதால் ஒளிப்பாய்தல் நடைபெறுகிறது. ஒத்திசையும் இலேசர்கள் சிறந்தவை. ஏனெனில் அணுக்களிலும் மூலக்கூறுகளிலும் உள்ள கவரல்களுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/23&oldid=886963" இலிருந்து மீள்விக்கப்பட்டது