பக்கம்:லேசர் அறிவியல்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 ஆற்றல் மட்டங்களுக்கும் அவற்றின் கதிர்வீச்சைப் பொருந்துமாறு செய்யலாம். மிகச்சிறந்த ஒத்திசையும் இலேசர்கள் நீர்மக் கருவி அமைப்புகளே. இவற்றில் கரிமச் சாய மூலக்கூறுகள் வீறுள்ள பகுதிகளாகும். - ஓர் இலேசரில் ஒளியினைப் பாயச் செய்ய, மற்றொரு இலேசரைப் பயன்படுத்துவது பொதுவான வழக்கமாகும். இதனால், வேறுப்பட்ட வகையான வெளியேறும் இலேசர் ஆற்றலை உண்டாக்கலாம். இது தொடர் சாய இலேசரில் நடைபெறுகிறது. இங்கு அடிக்கடி ஆர்கன்-அயனி இலேசர், ஒளியினைப் பாய்ச்சப் பயன்படுகிறது. ஒத்திசையும் இலேசர்களில் சாய-இலேசர் கதிர்வீச்சை இப்பொழுது கண்ணுக்குப் புலப்படும் நிறமாலையிலும் அதற்கு அப்பாலும் உண்டாக்கலாம். இலேசர் பொருள்கள் தூண்டும் பொருள்களுமாகும். கடந்த 20 ஆண்டுகளில் பல இலேசர் பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை திண்மநிலை, நீர்மநிலை, வளிநிலை ஆகிய மூன்று நிலைகளிலும் உள்ளன. திண்மப் பொருள்கள் இவை சிவப்புப் படிகம், கேலியம் அர்சனைடு, நியோடைமியம் பூசிய கண்ணாடி, ஏலைடு, டங்கஸ்டேட், டிட்டானேட், மாலிப்டேட் முதலியவை ஆகும். இவற்றுடன் குரோமியம், யுரேனியம், சாமரியம், டைஸ்புரோசியம், பிராசிடோடைமியம், துலியம் முதலியவை தூண்டிகளாகச் சேர்க்கப்படுகின்றன. அரிய புவி மூலங்களான நியோடைமியம், எட்ரியம், கேடோலினியம், ஆல்மியம், டெர்பியம் ஆகியவை கண்ணாடியுடன் பூச அதிகமாகப் பயன்படுகின்றன. நீர்மப் பொருள்கள் இவை கனிம நீர்மங்களும், கரிம்ச் சாயங்களும் ஆகும். கனிம நீர்மம் பாசுவர ஆக்சிகுளோரைடு அல்லது செலினியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/24&oldid=886966" இலிருந்து மீள்விக்கப்பட்டது