பக்கம்:லேசர் அறிவியல்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. இலேசரின் இயங்குதிறன் இலேசரின் தேவைகள், அதன் இயங்குதிறன், கதிர்வீச்சுச் செறிவு ஆகியவை பற்றி இங்குக் காண்போம். தேவைகள் பொதுவாக இலேசர் குறிப்பிட்ட நீளமுள்ள ஊடு பொருளாலானது. அதன் ஒரு முனையில் பாதியளவுக்குப் மறிக்கும் ஆடியும் மற்றொரு முனையில் முழு அளவுக்கு மறிக்கும் ஆடியும் இருக்கும். ஊடுபொருள் தேர்வு, கம்பத்தின் நீள்ம், மறிக்கும் ஆடிகளின் இயல்பு ஆகியவை நாம் விரும்பும் துல்லிய தேவைகளின் அடிப்படையில் அமைந்தவை. உயர்ந்த ஆற்றலுக்குக் கொண்டு செல்லப்பட்டுப்பின், அந்நிலையிலிருந்து திரும்பி, ஒளிக்கதிர் வீச்சினை வெளியிடக்கூடியதாக விறுமிக்க ஊடுபொருள் இருக்கவேண்டும். கீழ் ஆற்றல் நிலையைக் காட்டிலும் மேல் ஆற்றல் நிலையில் அதிக அணுக்கள் அல்லது மின்னணுக்கள் இருக்கக்கூடிய நிலையினைக் கருவித்தொகுதி பெற வேண்டும். இதற்குத் தூண்டப்பட்ட துகள்கள் அதேநிலையில் உரிய கால அளவுக்கு இருக்கவேண்டும். இலேசர் ஒளியின் அைைலநீளம், மிகக்குறுகியது. வானொலி அலைகளைக் காட்டிலும் பல மடங்கு அது குறைவானது. இவ்வாறு இருப்பதால்தான், ஒரே நேரத்தில் வானொலியைக் காட்டிலும் இலேசரில் அதிகச் செய்திகளை அனுப்பமுடிகிறது. மேலும், ஊடுபொருள் கம்பத்தின் நீளம், இலேசரின் வெளியேறு கதிர் வீச்சீன் அலைநீள முழு எண் மடங்காக இருக்க வேண்டும். இயங்குதிறன் முன்னரே நாம் பார்த்த சில முக்கிய இலேசர்களின் இயங்குதிறனை இங்கு ஒப்பிட்டுப் பார்ப்போம். அன்றாட வாழ்வில் பயன்படும் ஒளிமூலங்களின் இயங்குதிறன் மிகக் குறைவே. வெண்சுடர் விளக்கிற்கு அது 3%.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/26&oldid=886970" இலிருந்து மீள்விக்கப்பட்டது