பக்கம்:லேசர் அறிவியல்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 இலேசர், திண்ம இலேசர் ஆகியவற்றுக்கு உள்ளது போன்று அவ்வளவு உயர்வாக இல்லை. இலேசர் கற்றை உண்டாதல் செறிவுள்ள iசு ஒளியினால் ஊடுபொருள் தூண்டப்படுகிறது. இப்பொருள்களுக்கே உரிய கதிர்வீச்சு, கம்பத்தின் உள்ளே நடைபெறும் மின்மறிப்புகளாலும் அணுக்கள் மேன்மையாலும் தூண்டப்படுவதாலும் உண்டாகிறது. இறுதியாகச் செறிவான ஒளிவீச்சுக்கற்றை, அரைமறிப்பான் முடியும் முனையிலிருந்து வெளியேறுகிறது. இசைவுநிலையில் இருக்கத் தேவையான நேரத்திற்கு அணுக்கள் தூண்டியநிலையில் உள்ளன. பின், படிப்படியாக அவை எல்லாம் தங்கள் அடிநிலைக்கு வருகின்றன. கதிர்வீச்சுச் செறிவு பொதுவாக, இலேசரின் கதிர்வீச்சுச் செறிவு மிக அதிகமிருக்கும். ஒரு சதுர மில்லிமீட்டருக்குக் கதிரவன் ஆற்றல் 70 வாட் ஆக்சி, அசிட்டலின் சுடரின் ஆற்றல் 1000 வாட் ஆனால், கார்பன் டை ஆக்டைடு இலேசரின் வெளியேறு ஆற்றல் ஒரு சதுர மில்லி மீட்டருக்கு 2.5 மில்லியன் வாட்டாகும். குறுக்களவில் ஒருமைக்ரான் வரையுள்ள பரப்பில் இலேசர் ஒளிக்கற்றையினைக் குவிக்க இயலும், 50,00,00,000 வாட்டுகள் உயர்வரை ஆற்றல் கொண்ட ஒளிக்கற்றையினை ஒரு சதுர சென்டி மீட்டருக்குக் குறைவான பரப்பில் குவியுமாறு செய்யக்கூடிய சிவப்புகல் இலேசர் அமெரிக்காவிடம் உள்ளது. பொதுவாக, ஒளி மூலமாக இலேசர் இருப்பதால் வில்லையின் மூலம் அதைக் குவித்து அதிகச் செறிவுள்ள சிறிய புள்ளியினை அதனால் உண்டாக்க இயலும். ஓர் அங்குலத்தில் 50 மில்லியனில் (500 இலட்சத்தில் ஒரு பங்கு குறுக்களவுள்ள துளையின் வழியாகச் செறிவான ஒளிக்கற்றை செல்ல வல்லது. அதிகத் துல்லியத்துடனும் அதனைச் செலுத்த இயலும் காட்டாகப் புவிக்கும் திங்களுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/28&oldid=886973" இலிருந்து மீள்விக்கப்பட்டது