பக்கம்:லேசர் அறிவியல்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 இருப்பினும், உயரிய படிகக்கல் இறக்குமதி செய்யப்படவேண்டிய நிலையிலேயே உள்ளது. துத்தநாகச் செலினைடு முதலிய பொருள்களிலிருந்து வில்லைகள், சாளரங்கள் ஆகியவற்றை உருவாக்க இத்துறை திட்டமிட்டுள்ளது. கார்பன்-டை-ஆக்ஸைடு இலேசர் வெளிப்படுத்தும் அகச் சிவப்புக் கதிர்வீச்சு இப்பொருள்கள் வழியாகச் செல்லக்கூடியது. ஆனால், இலேசர் ஒளி, படிகக் கல்லில் செல்லாது. ஆடிகள் இவற்றின் மறிக்கும் பண்பு அதிகத் தேர்வுமிக்கதாய் இருக்கவேண்டும். ஓர் ஆடிக்குக் கிட்டத்தட்ட 100 பங்கு மறிப்புப் பெருகெண் இருக்கவேண்டும். தேர்வுப் பண்புப்படி, ஓர் அலைநீளத்திற்கும்மட்டுமே இந்த உயர்ந்த மறிப்புப் பெருகெண் ஆடிக்கு இருக்கவேண்டும். ஊடுபொருளில் இரு ஆடிகளுக்கிடையே உள்ள தோராய நீளம், ஒருங்கியைவுக்குழிவினை உண்டாக்குகிறது. இத்தேவைகள் அனைத்தும் நிறைவேறிய பின்னரே, இலேசர் ஒளிக்கற்றை உண்டாக்கப்படவேண்டும். மின் மறிப்பான்களைத் தவிர, ஈட்டலான் முதலிய மறிப்பான்களும் பயன்படுகின்றன. இவை புரூய்ஸ்டர் சாளரங்களுக்கு இரு முனைகளிலும் உள்ளன. இவற்றில் ஒன்று முழுக் கற்றையினையும் (99.8%) மற்றென்று அதில் 97% யும் மறிக்க வல்லவை. 97% மறிப்பு ஆடியின் வழியாகச் செல்லும் கற்றையின் ஒரு பகுதி, வடிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. எஞ்சிய பகுதி ஆடிகளுக்கிடையே குழாயின் வழியாக மறிக்கப்பட்டுச் செறிவு மிக்கதாகிறது. இவ்வாடிகளைச் செய்ய வல்ல நிறுவனம் சிஐஎஸ்எல் மட்டுமே. கண்ணாடிப்பரப்புகளில் மறிப்புப்பூச்சினை வெற்றிடத்தால் பூசவல்ல உயரிய தொழில் நுணுக்க அறிவும், ஒளிஇயல் வேலைப்பாடும் இதற்குத் தேவை. ஒவ்வொரு பூச்சு அடுக்கும் 600 ஆங்கஸ்டாம் தடிப்புள்ளது. நிறைவாக மறிக்கக்கூடிய ஒர் ஆடியில் 21 அடுக்குகள் இருக்கும். படியும் பூச்சுகள் மின்தடைப் பொருள்கள். சல்பைடுகள், புளோரைடுகள் கொண்ட மென்பூச்சுகள் எளிதாகப்படிபவை. ஆற்றல் குறைவான இலேசர்களில் இவை பயன்படுகின்றன. ஆனால், கீறலுக்கும் உரிதலுக்கும் அவை உட்படுபவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/31&oldid=886982" இலிருந்து மீள்விக்கப்பட்டது