பக்கம்:லேசர் அறிவியல்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 இருப்பினும், ஆக்சைடுகளைக் கொண்ட கடினப்பூச்சுகளைப் படியச் செய்வதற்குத் தேவையான நுணுக்கங்களைச் சிஐஎஸ்எல் உருவாக்கி உள்ளது. உயிர்வளி உள்ள வெற்றிட அறையில் மட்டவகை ஆக்சைடு ஆவியாக்கப்படுகிறது. இதனால் பெறப்படும் உயர்வகை ஆக்சைடு, படியுமாறு செய்யப்படுகிறது. பூச்சின் தன்மையினை ஆய்ந்தறிய ஆங்ஸ்டாம் மறிப்புமானி முதலிய கருவிகளைச் சிஐஎஸ்எல் உருவாக்கியுள்ளது. இன்று இத்தகைய கடினப் பூச்சுகளைக்கொண்ட ஆடிகளை இலேசர் தொகுதிக்கு இந்தியாவில் வழங்கும் ஒரே நிறுவனம் சிஐஎஸ்எல் மட்டுமே. கிட்டத்தட்ட 400 ஆடிகளைப் பல ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இது வழங்கியுள்ளது. மேலும், இலேசர் தொகுதிகளைப் பற்றி ஆராயும் ஆய்வுக்கூடங்களுக்கும் வில்லைகள், வடிக்கட்டிகள் முதலிய குறைந்த இழப்பும், தளப்பூச்சும் உடைய ஒளி இயல்பகுதிகளை சிஐஎஸ்எல் வழங்கி வருகிறது. ஒரு மில்லிவாட் ஈலியம்-நியான் இலேசரைச் செய்யும் தொழில் நுணுக்க ஆறிவை, சிஐஎஸ்எல் இந்திய மின்னணுக்கழகத்திற்கு வழங்கியுள்ளது. பிந்திய கழகம் அதனைச் செய்யவல்லது. தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடத் தொழில் நுணுக்க அறிவைக் கொண்டு தில்லி நிறுவனம் ஒன்று மேற்கூறிய இலேசர் தொகுதி ஒன்றினை அமைக்கத்திட்டமிட்டுள்ளது. இத்தொகுதியினை உட்சாளரங்களுடன் மிகத்திருத்தமாக அமைக்கும் முயற்சியில் சிஐஎஸ்எல் ஈடுபட்டுள்ளது. இதனை ஒரு பெட்டியில் வைத்து விற்கலாம். ஒளி இயல் மெய்ந் நிகழ்ச்சிகளை விளக்கலாம். ஒருவாட் கார்பன்-டை-ஆக்சைடு இலேசரையும் அது முடித்துள்ளது. இந்திய அறிவியல் நிறுவனத்தின் எந்திரப்பொருள் இயல்துறையும், சிஐஎஸ்எல்லும் நியோடைமியம் கண்ணாடி, நியோடைமியம்-ஒய்ஏஜி இலேசர்களை அமைக்கத்திட்டமிட்டுள்ளன. பொதுவாக, நம்நாட்டிலேயே கிடைக்கும் பொருள்களைக் கொண்டு, தூண்டுபொறி நுட்பம் அமைக்கப்படுகிறது. இது பாராட்டத்தக்க முயற்சியாகும். மாற்றிகள், தனி அலுமினிய மின் வாய்கள் முதலியவற்றை இப்பொறிநுட்பம் கொண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/32&oldid=886984" இலிருந்து மீள்விக்கப்பட்டது