பக்கம்:லேசர் அறிவியல்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 க்யூ வடிவச்சொடுக்கி இலேசர் நுணுக்கத்தின் அண்மைக்கால முன்னேற்றத்தால் உண்டானவைகளில் இதுவும் ஒன்று. இதில் ஒளியை உறிஞ்சக்கூடிய பொருள் உண்டு. ஒரளவு ஒளியை உறிஞ்சியபின், அது ஊடுருவும் பொருளாகிறது. இலேசர் ஒளிக்கற்றைக்குக் குறுக்காக இதை வைக்க, உயர்ந்த செறிவைப் பெறாதவரை, இலேசர் ஒளி வெளிவராது. இதனால் மிகச் செறிவான இலேசர் கற்றைகள் உண்டாகின்றன. திரு. சி.கே.என். பட்டேல் என்பார் அமெரிக்காவில் உருவாக்கிய கார்பன்-டை-ஆக்சைடு இலேசர் 8000 வாட் அளவுக்குள்ள ஆற்றலைத் தொடர்ச்சியாக அளிக்கவல்லது. எடையும் விலையும் இலேசரின் மிகக் குறைவான எடை 25 பவுண்டு. அதன் அதிக எடை 250 பவுண்டு அல்லது அதற்கு மேலும் இருக்கலாம். அதன்மிக மலிவான விலை ரூ.1500 அதிகவிலை ஒர் இலட்சரூபாய்க்கு மேல்.

  • 竞资资赞资会

6. இலேசர் கருவியமைப்புகளும் அவற்றின் பயன்களும் இலேசரின் வளர்ச்சியால் பல கருவித்தொகுதிகள் உருவாகியுள்ளன. அவற்றில் ஒருசிலவற்றின் அமைப்பு, இயங்கும்முறை, பயன்கள் ஆகியவைபற்றி இங்குக் காண்போம். இலேசர் எல்லைக்காணி இதில் சிவப்புக்கல் இலேசர் உள்ளது. ஒருபார்வைக் கருவியினால் பொருளை நோக்கி, ஒளிக்கற்றைச் செலுத்தப்படுகிறது. இக்கருவி வடிக்கட்டியுடன் கூடியது. இது மறித்த ஒளிக்கற்றையினைப் பெற்று, அதனை ஒளிப்பெருக்கிக்கு அனுப்புகிறது. பெருகிய குறிபாடு.நுழைவுத்துடிப்புகள் கொண்ட பிறப்பியை முடுக்குகிறது. குறிப்பிட்ட நேரத்தில் கருவியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/33&oldid=886988" இலிருந்து மீள்விக்கப்பட்டது