பக்கம்:லேசர் அறிவியல்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 இத்தொலைக்காட்சித் தொகுதி முதல் தடவையாகத் தொலைக் காட்சியினையும் இலேசர் நுணுக்கத்தையும் பயன்படுத்தி உயரிய படத்திண்மையுள்ள உருவங்களை அனுப்புகிறது, பதிவு செய்கிறது. வழக்கத்தில் உள்ள தொலைக்காட்சி உருவங்களைவிட, அதிக விளக்கமாகவும் பத்து மடங்குக் கூர்மையும் உள்ள படங்களை இது உண்டாக்கிறது. அதாவது, 5000 வரிப் படங்களை இது உண்டாக்குகிறது. அமெரிக்க இல்லங்களிலுள்ள தரமான தொலைக்காட்சித் தொகுதிகளில் 525 வரிப்படங்களே உண்டாகின்றன. புதிய நீர் மூலங்களைக் காணவும், பயிர் வளர்ச்சியைக் கண்காணிக்கவும், மறைந்துகிடக்கும் கனிவளங்களைக் கண்டறியவும், பனிப்பாறை ஓட்டத்தை அறியவும், வெட்டுக்கிளி முதலிய நோய் உயிரிகளின் இடம்பெயரலைக்கண்டுபிடிக்கவும், காட்டில் உண்டாகும் தீக்களைக் கண்டறியவும் புதிய நகரங்களை அமைக்கவும் இது பயன்படுகிறது. இருளில் இலேசர் தொலைக்காட்சிப் புகைப்படப் பெட்டி இஃது அமெரிக்காவில் உருவாகியுள்ளது. இருட்டில் உள்ள பொருள்களின் உருவினையும் திரையில் விழுமாறு செய்கிறது. இதற்கு ஈலிய-நியான் இலேசர் பயன்படுகிறது. இதன் செறிவு மிகக் குறைவாக உள்ளதால் கண்ணுக்கு ஒன்றும் தீங்கில்லை. புகைப்படப்பெட்டியிலிருந்து 9 மீட்டர் தொலைவிலுள்ள பொருள்கள் அல்லது ஆட்களைக் குறைந்த ஒளியினால் தொலைக்காட்சிக்கு உட்படுத்துகிறது. இதனால் திரையில் உண்டாகும் உருவம், ஒளிர்வான பகல் ஒளியில் அல்லது படப்பிடிப்பு நிலைய ஒளியில் தொலைக்காட்சி செய்யப்பெற்றுக்கிடைக்கும் உருவம் போலவே தெளிவாகவும் கூர்மையாகவும் இருக்கும். இதில் சிவப்பு இலேசர் ஒளிக்கற்றை உண்டாகிறது. இலேசர் தொலைக்காட்சி அலகின் எடை 27 கி.கி. இதன் பருமனவுகள் பின்வருமாறு: 20 x 7.5 x 45 செ.மீ. மிகச்சிறிய பகுதிளைப் பயன்படுத்தி, இத் தொகுதியின் எடையை 12 கி.கி. ஆகவும் அளவை 20 x25 x 45 செ.மீ ஆகவும் குறைக்க இயலும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/36&oldid=886993" இலிருந்து மீள்விக்கப்பட்டது