பக்கம்:லேசர் அறிவியல்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 இத்தொகுதி பின்வரும் முறையில் வேலை செய்கிறது: இலேசரால் உண்டாக்கப்படும் ஒளி, தொலைக்காட்சிப்படப் பெட்டியிலுள்ள ஓரிணை சுழலும் ஆடிகளால் விலக்கப்படுகிறது. அதனால் ஒருவினாடியில் ஒவ்வொரு 60 பங்கு நேரத்தில் புகைப்படப் பெட்டிக்கு முன்னுள்ள பகுதியை இக்கற்றை அலகிடுகிறது. புகைப்படப்பெட்டிக்கு அருகிலுள்ள பொருளால் மறிக்கப்படும் இலேசர் ஒளி மின்னணுக்கண் எனப்படும் ஒளிப்பெருக்கியால் உணரப்படுகிறது. இதிலிருந்து மின்னணுத்துடிப்புகள் தரமுள்ள தொலைக்காட்சிப் பெறுவிக்குச் செல்கிறது. பெறுவியின் படக்குழாய் மின்னணுக்கண் எனப்படும் ஒளிமின் கலங்களால் ஒத்தமையுமாறு செய்யப்படுவதால், அலகிடும்மின்னணுக் கற்றை புகைப்படப்பெட்டியின் அலகிடும் இலேசர் கற்றையோடு ஒத்தமைகிறது. சட்டக்கண்காணிப்பு நிறுவனங்களில் திருட்டு முதலியவற்றை அறியலாம். இரவில் நடமாடும் விலங்குகளை ஆராயவும், எல்லாப் பருவ நிலைகளிலும் வான் ஊர்திகள் இறங்கவும் இது பயன்படும். இலேசர் நில நடுக்க வரைவி இதன் நுண்மை வழக்கத்திலுள்ள எந்திர வரைவிகளைக்காட்டிலும் அதிகமாகும். இலேசரின் மறிக்கும் குழியின் நீளமாற்றம், இயங்கும் அதிர்வெண்ணை மாற்றுகிறது என்னும் உண்மை இதில் அடங்கியுள்ளது. இலேசர் பிரம்பு எதிரிலுள்ள தடைகளை அறிந்து, நடந்து செல்லக்குருடர்களுக்கு இது பெரிதும் உதவுகிறது. இலேசர் மீள்மாற்றி கலிபோர்னிய அறிவியலார் இதனை அமைத்துள்ளனர். இது ஒளியலைகளை மின்னோட்டமாக மாற்றுகிறது. இதனால் தொலைக்காட்சிக் குழாய்களில் படங்களும் வானொலிப் பேசிகளில் ஒலியும் உண்டாகின்றன. இம்மாற்றங்களை இது ஒரு விநாடியில் பல மில்லியன் விரைவில் செய்கிறது. எந்த ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/37&oldid=886995" இலிருந்து மீள்விக்கப்பட்டது